惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Engineering at Meta
Engineering at Meta
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
I
InfoQ
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
人人都是产品经理
人人都是产品经理
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
Tailwind CSS Blog
MongoDB | Blog
MongoDB | Blog
Google DeepMind News
Google DeepMind News
WordPress大学
WordPress大学
量子位
美团技术团队
大猫的无限游戏
大猫的无限游戏
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Last Week in AI
Last Week in AI
博客园 - 司徒正美
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
小众软件
小众软件
C
Check Point Blog
博客园 - 三生石上(FineUI控件)
N
Netflix TechBlog - Medium
Recent Announcements
Recent Announcements
有赞技术团队
有赞技术团队
月光博客
月光博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளாவிட்டால் பின்னடைவு: மோட...
2026-04-24 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: இந்​தி​யப் பொருளா​தா​ரம் அண்​மைக் கால​மாக அடைந்​துள்ள வளர்ச்​சி​யைத் தக்க வைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால், வேலை​வாய்ப்பு மற்​றும் உற்​பத்​தித் துறை​யில் இந்​தியா அதிரடி​யான கட்​டமைப்​புச் சீர்​திருத்​தங்​களை மேற்​கொள்ள வேண்​டியது அவசி​யம் என்று பெர்ன்​ஸ்​டீன் ஆய்வு நிறு​வனம் எச்​சரித்​துள்​ளது.

இதுதொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடிக்கு அந்த நிறு​வனம் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: கடந்த 6 ஆண்​டு​களில் கொள்கை முடிவு​கள் சரி​யான திசை​யில் இருந்​த​தால், பொருளா​தார நிலைத்​தன்மை மற்​றும் ஜிடிபி தரவரிசை​யில் இந்​தியா முன்​னேற்​றம் கண்​டுள்​ளது.

எனினும், இந்த அண்​மைக்​கால வெற்​றிகளைக் கண்டு நாம் மனநிறைவு அடைந்​து​விடக் கூடாது. உலகளா​விய விநி​யோகச் சங்​கிலி மாற்​றமடைந்து வரும் வேளை​யில், இந்​தியா தனது சீர்​திருத்​தங்​களை வேகப்​படுத்​து​வது அவசி​யம். இல்​லா​விட்​டால் இது​வரை ஈட்​டிய பலன்​களை இந்​தியா இழக்க நேரிடும்.

இந்​தி​யா​வின் நடுத்தர வர்க்​கத்தை உயர்த்​திய சேவைத் துறைக்​கு, தற்​போது செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பம் பெரும் சவாலாக உரு​வெடுத்​துள்​ளது. தானி​யங்கி முறை​யி​னால் நடுத்தர வர்க்க வேலை​வாய்ப்​பு​கள் பறி​போகும் அபா​யம் உள்​ளது. இந்​தியா இத்​தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​துபவ​ராக மட்​டுமே இல்​லாமல், அதை உரு​வாக்​குபவ​ராக​வும் மாற வேண்​டும்.

நாட்​டின் 45 சதவீத உழைப்​பாளர்​கள், விவ​சா​யத் துறை​யில் ஈடு​பட்​டுள்ள போதி​லும், ஜிடிபி-க்கு அவர்​களின் பங்​களிப்பு வெறும் 15 சதவீத​மாக மட்​டுமே உள்​ளது. எனவே, விவ​சாயச் சட்​டங்​கள் திரும்​பப் பெறப்​பட்​டாலும், இத்​துறை​யில் சீர்​திருத்​தங்​கள் இன்றி வளர்ச்​சியை எட்ட முடி​யாது. வெறும் கடன் தள்​ளு​படிகளும், மானி​யங்​களும் நிரந்​தரத் தீர்​வா​காது.

அதே​போல், பெட்​ரோலி​யத் தேவை​யில் 88 சதவீதத்தை இறக்​கும​தியை மட்​டுமே நம்​பி​யிருப்​பது பலவீன​மானது. மின்​சார வாக​னத் தொழில்​நுட்​பத்​துக்கு விரை​வாக மாறா​விட்​டால், மீண்​டும் வெளி​நாட்​டுத் தொழில்​நுட்​பங்​களைச் சார்ந்​திருக்​கும் நிலை இந்​தி​யா​வுக்கு ஏற்​படும்.

பல்​வேறு மாநில அரசுகள் அறிவிக்​கும் நேரடிப் பணப் பரி​மாற்​றத் திட்​டங்​களுக்​காக ஆண்​டுக்கு ரூ.1.7 லட்​சம் கோடி முதல் ரூ. 2.5 லட்​சம் கோடி வரை செல​விடப்​படு​கிறது. இது போன்ற செல​வினங்​கள் உள்​கட்​டமைப்பு முதலீடு​களைக் குறைத்​து, பணவீக்​கத்தை அதி​கரிக்​கும் அபா​யம் உள்​ளது. வளர்ந்து வரும் ஒரு நாட்​டின் பொருளா​தா​ரத்​துக்கு இது நல்​லதல்ல.

ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுத் துறைக்​கான இந்​தி​யா​வின் முதலீடு ஜிடிபி-​யில் 0.6 சதவீத​மாக மட்​டுமே உள்​ளது. இது உலக நாடு​களு​டன் ஒப்​பிடு​கை​யில் மிகக் குறைவு. இந்​தி​யா​விடம் மூலதனம், திறமை, ஆர்​வம் ஆகிய​வற்​றுக்​குக் குறை​வில்​லை. ஆனால் கடின​மான முடிவு​களை உடனுக்​குடன் எடுக்​கும் துணிச்​சலே இப்​போதைய தேவை. இவ்​வாறு அந்த கடிதத்​தில் பெர்ன்​ஸ்​டீன் நிறு​வனம் சுட்​டிக்​காட்​டி​யுள்​ளது.