




















பெங்களூரு: பிரதமர் மோடி நேற்று கர்நாடகா சென்றிருந்த நிலையில், அவர் செல்லும் பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வாழும் கலை அமைப்பின் 45-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை கலந்து கொள்வதற்காக கர்நாடகா வந்திருந்தார் பிரதமர் மோடி. அப்போது, வாகன அணிவகுப்பு பெங்களூரு புறநகர் பகுதியான நைஸ் ரோடு (NICE Road) சந்திப்பு வழியாகச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. முன்னதாக, காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு இரண்டு ஜெலட்டின் குச்சிகள் இருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர், அந்த ஜெலட்டின் குச்சிகளைப் பத்திரமாக மீட்டனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。