惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
The Cloudflare Blog
IT之家
IT之家
V
V2EX
雷峰网
雷峰网
MyScale Blog
MyScale Blog
P
Proofpoint News Feed
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - Franky
Engineering at Meta
Engineering at Meta
S
SegmentFault 最新的问题
GbyAI
GbyAI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 司徒正美
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
博客园 - 叶小钗
Blog — PlanetScale
Blog — PlanetScale
C
Check Point Blog
A
About on SuperTechFans
B
Blog
月光博客
月光博客
宝玉的分享
宝玉的分享
Last Week in AI
Last Week in AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கொளத்தூரில் ஸ்டாலின் தோல்விக்கு சேகர்பாபு தான் காரணம்: மு...
செய்திப்பிரிவு · 2026-05-06 · via hindutamil

Updated on: 

சென்னை: கொளத்​தூரில் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு சேகர் பாபு தான் காரணம் என திமுக முன்​னாள் எம்​எல்ஏ பரந்​தாமன் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். சட்​டப்​பேரவை தேர்​தலில் கொளத்​தூரில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் எதிர்த்து போட்​டி​யிட்ட தவெக வேட்​பாளர் வி.எஸ்​.​பாபு​விடம், 8,795 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் மு.க.ஸ்​டா​லின் தோல்​வியை தழு​வியது பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது.

இந்​நிலை​யில், “தலை​வர் தோல்விக்கு காரண​மானவர் எப்​படி கொஞ்​ச​மும் வெட்​கம், பயம், கூச்​சம் எது​வும் இல்​லாமல் தலை​வர் முன்பு வந்து முகத்தை காட்டி நிற்​கிறார்” என்று திமுக முன்​னாள் எம்​எல்ஏ பரந்​தாமன், சேகர் பாபுவை குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட பதி​வில், “எனக்கு இரவு முழு​வதும் உறக்​கமில்​லை. என் கண்​களை மூடி​னாலும் மு.க.ஸ்​டா​லின் முகமே வந்து கொண்டு இருக்​கிறது. தேர்​தல் அரசி​யலில் வெற்றி தோல்வி என்​பது இயற்​கை. இவை இரண்​டின் உச்​சத்​தை​யும் பார்த்த இயக்​கம் திமுக.

ஆனால், தமிழகம் முழு​வதும் தேர்​தல் பிரச்​சா​ரம் மேற்​கொண்ட தலை​வரின் தொகு​தியை கவனிக்​கத் தவறிய​வர் மீது தயவு தாட்​சன்​யம் இன்றி தலைமை நடவடிக்கை எடுத்​தால் தான் உண்மையான திமுக தொண்​டன் நிம்​ம​தி​யாய் இருப்​பான்.

தலை​வர் தோல்விக்கு காரண​மானவர் எப்​படி கொஞ்​ச​மும் வெட்​கம், பயம், அச்​சம், கூச்​சம் எது​வும் இல்​லாமல் தலை​வர் முன்பு வந்து முகத்​தைக் காட்டி நிற்​கிறார்? நான் பார்த்​துக்​ கொள்​கிறேன் என்று சொன்​னது இதைத்​தானா சேகர்​பாபு அவர்​களே?” என்று கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

கடந்த 2021 தேர்​தலில் எழும்​பூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற பரந்​தாமன், இந்த முறை வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட​வில்​லை. இதற்கு காரணம் சேகர்​பாபு தான் என்று பேச்சு நிலவி வந்​தது.

தற்​போது, தேர்​தல் முடிவு​கள் வெளிவந்த நிலை​யில், சேகர் பாபுவை நேரடி​யாகவே முன்​னாள் எம்​எல்ஏ பரந்​தாமன் தாக்கி பேசி​யிருப்​பது, தி​முக வட்​டாரங்​களில்​ பரபரப்​பை ஏற்படுத்தியுள்ளது.