惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
云风的 BLOG
云风的 BLOG
Blog — PlanetScale
Blog — PlanetScale
Recent Announcements
Recent Announcements
Last Week in AI
Last Week in AI
博客园 - Franky
Microsoft Security Blog
Microsoft Security Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Vercel News
Vercel News
MyScale Blog
MyScale Blog
大猫的无限游戏
大猫的无限游戏
罗磊的独立博客
H
Help Net Security
月光博客
月光博客
Martin Fowler
Martin Fowler
博客园 - 【当耐特】
宝玉的分享
宝玉的分享
P
Proofpoint News Feed
GbyAI
GbyAI
腾讯CDC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மல்யுத்த தகுதிச் சுற்று: வினேஷ் போகத் பங்கேற்க உச்ச நீதிம...
செய்திப்பிரிவு · 2026-05-30 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: நடப்பு ஆண்டில் நடை​பெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்​டிக்​கான தகு​திச் சுற்று தேர்வு முகாமில் பங்கேற்க மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பங்​கேற்​கலாம் என்று உச்ச நீதி​மன்​றம் அனு​மதி அளித்து உத்​தர​விட்​டுள்​ளது.

ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகள் இந்த ஆண்டு நடை​பெற உள்ள நிலை​யில், அதில் பங்​கேற்க இருக்​கும் மல்​யுத்த வீரர், வீராங்கனை​களுக்​கான தேர்வு முகாம்​கள் மே 30 மற்​றும் 31 ஆகிய தேதி​களில் நடை​பெற உள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டது. இதில் கலந்து கொள்ள வினேஷ் போகத் தயா​ராக இருந்தார். ஆ​னால், ஊக்​கமருந்து எதிர்ப்பு விதி​களின்​படி, ஓய்​விலிருந்து திரும்புபவர்கள் 6 மாதங்​களுக்கு முன்பே அறிவிக்க வேண்​டும் என்ற விதி​யைக் காரணம் காட்டி வினேஷ் போகத்​துக்கு இந்​திய மல்​யுத்த சம்​மேளனம் தடை​வித்​தது. இதை எதிர்த்து வினேஷ் போகத் டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து வினேஷ் போகத் மேல்​முறை​யீடு செய்​தார். இந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி டி.கே.உ​பாத்​யா​யா, நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்​கிய அமர்​வு, வினேஷ் போகத் தகு​தித் தேர்​வில் பங்​கேற்க அனு​மதி அளித்து உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில், உயர் நீதி​மன்​றத்​தின் உத்​தரவை எதிர்த்து இந்​திய மல்​யுத்த சம்​மேளனம் தாக்​கல் செய்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.எஸ். நரசிம்​மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்​கிய அமர்​வு, ஆசிய விளையாட்டுப் போட்​டிக்​கான தேர்வு முகாமில் பங்​கேற்க வினேஷுக்கு அனு​மதி அளித்து உத்​தர​விட்​டுள்ளது.

இதுதொடர்​பாக நீதிப​தி​கள் நேற்று பிறப்​பித்த இடைக்​கால உத்தரவில் கூறி​யுள்​ள​தாவது: உயர் நீதி​மன்​றம் ஏற்​கெனவே ஓர் உத்​தரவை பிறப்​பித்​துள்​ள​தால் மல்​யுத்த வீராங்​கனை வினேஷ் போகத்​தின் நம்​பிக்​கை​யும் எதிர்​பார்ப்​பும் அதி​கரித்​துள்​ளது. இந்நிலை​யில், எங்​களால் எதை​யும் செய்ய இயலாது.

நீங்​கள் வீட்​டுக்கு திரும்​பிச் செல்​லுங்​கள் என்று கூறு​வது முறையாக இருக்​காது. இவர் ​(​வினேஷ் போகத்) நாட்​டுக்கு பெருமை சேர்த்​துள்​ளார். இவரது வழக்கை உயர் நீதி​மன்​றம் விசாரித்த முறை மீது எங்​களுக்கு அதிருப்தி உள்​ளது. இவ்​வாறு அதில் நீதிப​தி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

மேலும், வினேஷ் போகத்​தின் மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்​துக் கொள்​வ​தாக அறி​வித்த உச்ச நீதிமன்றம், தனது பங்​கேற்பை எதிர்த்து மல்​யுத்த சம்​மேளனம் தாக்​கல் செய்த மனு குறித்து விளக்​கம் அளிக்​கு​மாறு வினேஷ் போகத்​துக்கு உத்​தர​விட்​டுள்​ளது. இதையடுத்து இன்று (மே 30) நடை​பெறவுள்​ள ஆசி​ய விளை​யாட்​டுப்​ போட்​டிக்​கான தகு​தித்​ தேர்​வில்​ வினேஷ் போகத்​ பங்​கேற்​கவுள்​ளார்​.