惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The Cloudflare Blog
L
LangChain Blog
WordPress大学
WordPress大学
V
V2EX
M
MIT News - Artificial intelligence
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Stack Overflow Blog
Stack Overflow Blog
J
Java Code Geeks
F
Fortinet All Blogs
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
腾讯CDC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
D
Docker
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
博客园 - 叶小钗
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
The Blog of Author Tim Ferriss
人人都是产品经理
人人都是产品经理
Engineering at Meta
Engineering at Meta
Y
Y Combinator Blog
雷峰网
雷峰网
The GitHub Blog
The GitHub Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் 8 பேர் கைது - அறக...
ஆர்.ஷபிமுன்னா · 2026-06-27 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு புகார்​களை மாநில அரசு அமைத்​துள்ள சிறப்பு விசா​ரணைக் குழு (எஸ்​ஐடி) உறுதி செய்​துள்​ளது.

அதன் அடிப்​படை​யில், பல்​வேறு பிரிவு​களின் கீழ் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு கோயில் அறக்​கட்​டளை ஊழியர்​கள் 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் அறக்​கட்​டளை பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராயின் முன்​னாள் வாகன ஓட்​டுநர் டின்னு (எ) ராம் ஷங்​கர் யாதவ், அறக்​கட்​டளை ஊழியர் அனுகல்ப் மிஸ்​ரா, அவரது மைத்​துனர் லவ்​குஷ் மிஸ்​ரா, டின்​னு​வின் மரு​மகன் மனிஷ் யாதவ், கருணேஷ் பாண்​டே, ராம் ஷங்​கர் மிஸ்​ரா, அவினாஷ் சுக்லா மற்​றும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் சுபாஷ் ஸ்ரீவஸ்​தவா ஆகியோர் அயோத்​தி​யில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 பேர் மீதும் வழக்​கு: இவர்​களில் காணிக்கை எண்​ணும் பணி முழு​வதை​யும் நிர்​வகித்த டின்னு முக்​கியக் குற்​ற​வாளி​யாக வழக்குப் பதி​வாகி உள்​ளது. கோடிக்​கணக்​கான ரூபாய் திருடி, அயோத்தி மற்​றும் அதன் சுற்​றுப்​புறப் பகு​தி​களில் சொத்​துகள் வாங்​கிய​தாக இவர் மீது குற்​றம் சுமத்​தப்​பட்​டுள்​ளது. இவருக்கு உதவி​யாக இருந்​த​தாக காணிக்கை எண்​ணும் பணி​யில் இருந்த மற்ற 7 பேர் மீதும் வழக்​கு​கள் பதி​வாகி உள்​ளன.

இதில், லவ்​குஷ் மிஸ்ரா வீட்​டிலிருந்து ரூ.12 லட்​சம், மணிஷ் குமார் யாத​விடம் இருந்து ரூ.36 லட்​சம் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. கைது செய்​யப்​பட்ட 8 பேரும் நேற்று அயோத்தி மாவட்ட செஷன்ஸ் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு பின்​னர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

அறக்​கட்​டளை​யின் மற்​றொரு முக்​கிய நிர்​வாகி கிருஷ்ண மோஹன் அளித்த புகாரின் அடிப்​படை​யில் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இவர், உ.பி.​யின் ஹர்​தோயைச் சேர்ந்த, இந்திய வனப் பணி​யின் மகா​ராஷ்டிரப் பிரி​வில் பணியாற்றியவர். இவர் நாக்​பூரில் வசித்த போது ராஷ்ட்​ரிய ஸ்வயம் சேவக் சங்கத்​தில் இணைந்து பல பொறுப்​பு​களை வகித்​தவர். கடந்த 2012-ல் பணி ஓய்வு பெற்ற பிறகு, சமூக சேவை​யில் தீவிர​மாக ஈடு​பட்டு வரு​கிறார்.

இந்​நிலை​யில், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்​கட்​டளை பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராய் மற்​றும் முக்​கிய நிர்​வாகி கோபால் ரான் ஆகியோர் பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளனர். எஸ்​ஐடி விசா​ரணை நடுநிலை​யாக நடை​பெறு​வதற்​காக இவர்​கள் ராஜி​னாமா செய்​த​தாகக் கூறப்​படு​கிறது. எஸ்​ஐடி இடைக்​கால அறிக்​கை​யில், ராமர் கோயில் காணிக்​கை​யில் கடந்த ஏப்​ரல் 27 முதல் ஜூன் 5 வரை 70 பெரிய திருட்​டு​கள் நடந்​திருப்​ப​தாகக் கூறப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடை​யில், ஆம் ஆத்மி மாநிலங்​களவை எம்​.பி. சஞ்​சய் சிங், கோயில் நிலத்​தி​லும் ஊழல் நடந்​துள்​ளது என்று புகார் கூறியுள்ளார். இதற்​கான ஆதா​ரங்​களை எஸ்​ஐடி​யிடம் சஞ்​சய் சிங் அளித்​துள்​ளார். இதனால் மேலும் பலர்​ கைது செய்யப்படுவார்கள்​ என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.