惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
I
InfoQ
J
Java Code Geeks
Microsoft Security Blog
Microsoft Security Blog
G
Google Developers Blog
D
DataBreaches.Net
Recent Announcements
Recent Announcements
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
B
Blog RSS Feed
Y
Y Combinator Blog
博客园 - 【当耐特】
博客园 - 聂微东
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
大猫的无限游戏
大猫的无限游戏
P
Proofpoint News Feed
量子位
C
Check Point Blog
F
Fortinet All Blogs
罗磊的独立博客
Last Week in AI
Last Week in AI
GbyAI
GbyAI
L
LangChain Blog
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மத நடவடிக்கை என்ற பெயரில் சாலையை மறிக்க முடி​யாது: உச்ச ந...
2026-04-29 · via hindutamil

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்

Updated on

1 min read

புதுடெல்லி: மத நடவடிக்​கை என்ற பெயரில் சாலையை மறிக்க முடி​யாது. சாலையை மறித்​தால் அரசு தலை​யிட முடி​யும் என்று உச்ச நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

சபரிமலை​யில் அனைத்து வயது பெண்​களை​யும் வழிபட அனு​ம​தித்த தீர்ப்​புக்கு எதி​ரான மறு ஆய்வு மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலைமையிலான 9 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல் சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது இடை​யீட்டு மனு​தா​ரர் சார்​பில் நிஜாம் பாஷா வாதிடும்​போது, “ஹிஜாப் அணிவது கட்​டா​யம் என்ற நம்​பிக்​கை​யில் உயர் நீதி​மன்​றம் தலை​யிட்டு ஹிஜாப் அணிவது இஸ்​லாத்​தில் கட்​டாய​மாகப் பின்​பற்​றப்​படும் வழக்​கம் இல்லை என்று தீர்ப்பு கூறியது” என்று தெரி​வித்​தார்.

வழக்​கறிஞர் ஏகலைவ துவிவேதி வாதிடும்​போது, “மத சுதந்​திரத்​தின் கீழ் விதிக்​கப்​பட்​டுள்ள கட்​டுப்​பாடு​கள் மத விவ​காரங்​களை நிர்​வகிக்​கும் உரிமைக்​குப் பொருந்​தாது” என்று தெரி​வித்​தார். இந்து தர்ம ஆச்​சார்ய சபா சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர் அக்​சய் நாக​ராஜன் கூறும்​போது, “மத நடவடிக்​கை​களில் பொது ஒழுங்கு உள்​ளிட்ட காரணங்​களைக் காட்டி அரசு தலை​யிட முடி​யாது ” என்றார்.

அப்​போது நீதிபதி பி.​வி. நாகரத்னா கூறும்​போது, “மதச்​சார்​பற்ற நடவடிக்​கைகள் பாதிக்​கப்​படும் பட்​சத்​தில் அரசு தலை​யிட முடி​யும். உதா​ரணத்​துக்கு ஒரு கோயி​லில் நடை​பெறும் தேரோட்ட நிகழ்​வுக்​காக அனைத்து சாலைகளை​யும் மறித்து அடைத்து வைக்க முடி​யாது. சாலைகளை மறித்து அடைத்து வைப்​ப​தற்​கும், மதத்​துக்​கும் தொடர்​பில்​லை. அரசு தலை​யிட்டு முறைப்​படுத்த முடி​யும்” என்று தெரி​வித்​தார்.

வழக்​கறிஞர் அஸ்​வினி குமார் உபாத்​யாய் கூறும்​போது, “லட்​சக்​கணக்​கான மசூ​தி​கள் இருந்​தா​லும் மெக்கா​வுக்​கும். லட்​சக்​கணக்​கான தேவால​யங்​கள் இருந்​தா​லும் ஜெருசலேத்​துக்கும் தனி புனிதத் தன்மை உள்​ளது. இது​போல 1,500 ஐயப்பன் கோயில்​கள் இருந்​தா​லும் சபரிமலைக்கு தனி புனிதத் தன்மை உள்​ளது. சம்​ஸ்​கிருதம் ஆங்​கிலத்தை காட்​டிலும் அதி​க​மாக 52 எழுத்​துக்​களைக் கொண்​டுள்​ள​தால் அலு​வல் மொழி​யாக்​கும் மசோ​தாவை டாக்​டர் அம்​பேத்​கர் அறி​முகப்​படுத்​தி​னார்” என்று வாதிட்​டார்.

அப்​போது நீதிபதி ஆர். மகாதேவன் குறுக்​கிட்​டு, ‘‘வழக்கு சார்ந்து மட்​டும் வாதிட வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.

நீதிபதி அறிவுறுத்தல்: அரசமைப்பு சாசனத்தை ஆங்​கிலத்​தில் விளக்​கு​வது கடினம் என்று வழக்​கறிஞர் அஸ்​வினி உபாத்​யாய் வாதிட்​ட​போது, மற்​றொரு நீதிபதி பி.​வி.​நாகரத்னா குறுக்​கிட்டு “கன்​னட​மும் 52 எழுத்​துகளைக் கொண்​டுள்​ளது. அனை​வரும் சமமே. மேட்​டிமை வாதத்தை முன் வைக்க வேண்​டாம்” என்று அறி​வுறுத்​தி​னார். மற்​றொரு நீதிபதி எம்​.எம். சுந்​தரேஷ் குறுக்​கிட்டு இது​போன்ற வாதங்​களை முன் வைக்​கக் கூடாது என்று கூறி வாதத்தை நிறைவு செய்ய அறிவுறுத்தினார்.