惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
爱范儿
爱范儿
WordPress大学
WordPress大学
博客园 - 三生石上(FineUI控件)
J
Java Code Geeks
Vercel News
Vercel News
aimingoo的专栏
aimingoo的专栏
T
Tailwind CSS Blog
罗磊的独立博客
B
Blog
博客园_首页
A
About on SuperTechFans
有赞技术团队
有赞技术团队
V
V2EX
U
Unit 42
I
InfoQ
IT之家
IT之家
博客园 - 司徒正美
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 叶小钗
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Stack Overflow Blog
Stack Overflow Blog
The Cloudflare Blog
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
துறைமுகம் - மதுரவாயல் மேம்பால பணிகள் 2027 நவம்பருக்குள் ந...
2026-05-23 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: துறை​முகம் - மதுர​வாயல் இடையே​யான மேம்​பாலப் பணி​கள் 2027 நவம்​பர் மாதத்​துக்​குள் நிறைவடை​யும் என்​று சென்னை துறை​முகத்​தின் தலை​வர் எஸ்​.​விஸ்​வ​நாதன், காம​ராஜர் துறை​முகத்​தின் தலை​வர் ஜெ.பி.ஐரின் சிந்​தியா ஆகியோர் தெரி​வித்​தனர்.

இது தொடர்​பாக சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது: கடந்த நிதி​யாண்​டில், இரு துறை​முகங்​களும் இணைந்து மொத்​த​மாக 107 மில்​லியன் டன் சரக்​கு​களைக் கையாண்டு புதிய சாதனையை படைத்​துள்​ளன.

இதில் சென்னை துறைமுகம் 57.9 மில்​லியன் டன் சரக்​கு​களை​யும், காம​ராஜர் துறைமுகம் 49.08 மில்​லியன் டன் சரக்​கு​களை​யும் கையாண்​டுள்​ளன. இரு துறை​முகங்​களின் ஒருங்​கிணைந்த செயல்​பாட்டு வரு​வாய் ரூ.2,400 கோடியை கடந்​துள்​ளது. இரு துறை​முகங்​களின் மூலதன செல​வின​மும் ஆயிரம் கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

இதில் சென்னை துறை​முகம் கடந்த நிதி​யாண்​டில் ரூ.1,185 கோடி செயல்​பாட்டு வரு​வாயை ஈட்​டி​யுள்​ளதுடன், துறை​முக வரலாற்​றிலேயே மிக அதிபட்​ச​மாக ரூ.434.29 கோடி நிகர உபரி வரு​வாயை பதிவு செய்​துள்​ளது.

காம​ராஜர் துறை​முகம் கடந்த நிதி​யாண்​டில் ரூ.1,239 கோடி செயல்​பாட்டு வரு​வாயை ஈட்​டியதுடன், நாட்​டின் முன்​னணி துறை​முகங்​களி​லேயே மிகக் குறைந்த இயக்க சதவீத​மாக 25.48 சதவீதத்தை பதிவு செய்​திருக்​கிறது.

இதே​போல் துறை​முகத்​தின் வட்​டி, வரி மற்​றும் தேய்​மானத்​துக்கு முந்​தைய வரு​வாய் (எபிட்​டா) வரலாற்​றிலேயே முதன்​முறை​யாக ஆயிரம் கோடி ரூபாயை கடந்து ரூ.1,071.63 கோடி​யாக உயர்ந்​துள்​ளது.

சென்னை துறை​முகத்​துக்கு செல்​லும் கனரக சரக்கு வாக​னங்​களுக்​காக பிரத்​யேக​மாக துறை​முகம் - மதுர​வாயல் இடையே அமைக்​கப்​பட்டு வரும் மேம்​பாலப் பணி​கள் 2027 நவம்​பர் மாதத்​துக்​குள் முழு​மை​யாக நிறைவடைய நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

காம​ராஜர் துறை​முகத்​தில் பெரிய கப்​பல்​களைக் கையாளுவதற்கு ஏது​வாக ரூ.440 கோடி மதிப்​பில் 6-வது கட்ட ஆழ்​கடல் தூர்​வாரும் பணி​கள் வெற்​றிகர​மாக முடிக்​கப்​பட்​டுள்​ளன.

இதனால் 2.44 லட்​சம் டன் சரக்கு கொள்​ளளவு கொண்ட மிகப்​பெரிய கப்​பல்​களை​யும் தற்​போது கையாள முடிகிறது. இதற்​கிடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்​பீட்​டில் செயல்​படுத்​தப்​பட​வுள்ள சென்னை துறை​முகத்​தின் ‘அவுட்​டர் ஹார்​பர் ப்ராஜெக்ட்’ தொடர்​பாக ‘ரைட்​ஸ்’ நிறு​வனம் போக்​கு​வரத்து ஆய்​வு​களை மேற்​கொண்டு வரு​கிறது.

செங்​கடல் பகு​தி​யில் நில​வும் சர்​வ​தேச பதற்​றங்​கள் மற்​றும் ஈரான்​-அமெரிக்கா இடையே​யான பிரச்​சினை​கள் காரண​மாகக் கச்சா எண்​ணெய் இறக்​கும​தி​யில் தொடக்​கத்​தில் சில சவால்​கள் இருந்​தா​லும், தற்​போது மாற்று வழிகள் மூலம் அவை சீரமைக்​கப்​பட்​டு​விட்​டன.

எனினும் இங்​கிருந்து வளை​குடா நாடு​களுக்கு அனுப்​பப்​படும் வாக​னங்​கள் ஏற்​றும​தி​யில் 6 முதல் 7 லட்​சம் டன் வரை பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. இதனை எதிர்​கொள்ள ஏற்​றும​தி​யாளர்​களுக்​குக் கூடு​தல் சேமிப்​புக் கிடங்கு வசதி​கள் மற்​றும் கட்​ட​ணச் சலுகைகள் வழங்​கப்​பட்​டு வரு​கின்​றன. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.