惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
阮一峰的网络日志
阮一峰的网络日志
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
博客园 - 叶小钗
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
罗磊的独立博客
量子位
Jina AI
Jina AI
T
Tailwind CSS Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
IT之家
IT之家
美团技术团队
雷峰网
雷峰网
爱范儿
爱范儿
S
SegmentFault 最新的问题
小众软件
小众软件
月光博客
月光博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
人人都是产品经理
人人都是产品经理
The Cloudflare Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒருவருக்கு 7 கிலோ ...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: மத்திய அரசின் அந்​தி​யோதயா அன்ன யோஜனா திட்​டத்​தில் உணவு தானிய ஒதுக்​கீட்டு முறையை மாற்​றியமைக்க அரசு பரிசீலித்து வரு​கிறது. இதன்​படி ஒரு​வருக்கு மாதம் 7 கிலோ, அதி​கபட்​சம் 35 கிலோ உணவு தானி​யம் வழங்​கப்​படும்.

உணவு மற்​றும் பொது விநி​யோகத் துறை, ‘தேசிய உணவுப் பாதுகாப்​புச் சட்​டம், 2013’-ல் திருத்​தம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ளது. இது தொடர்​பாக, ‘தேசிய உணவுப் பாது​காப்பு (திருத்த) மசோ​தா, 2026’ குறித்து ஜூலை 13ம் தேதி வரை பொது​மக்​கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்​திய உணவு அமைச்​சகம் கேட்டுக்கொண்டுள்​ளது.

தற்​போதைய சட்​டத்​தின்​படி, மிக​வும் ஏழ்​மை​யானவர்​களாகக் கருதப்​படும் அந்​தி​யோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்) குடும்பங்களுக்​கு, குடும்​பத்​தின் அளவைப் பொருட்​படுத்​தாமல் மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானி​யம் வழங்​கப்​படு​கிறது. இதற்கு மாறாக, முன்​னுரிமைக் குடும்​பங்​கள் (பிஹெச்) பிரிவினருக்கு ஒரு​வருக்கு மாதம் 5 கிலோ வழங்​கப்​படு​கிறது. இந்த நடை​முறை​யால், முன்​னுரிமைக் குடும்ப உறுப்​பினர்​களை​விட, பெரிய அளவி​லான ஏஏஒய் குடும்​பங்​களுக்​குக் கிடைக்​கும் சராசரி தனி​நபர் ஒதுக்​கீடு குறை​வாகவே உள்​ளது.

இது குறித்து உணவு அமைச்​சகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மிகவும் நலிந்த குடும்​பங்​களுக்​கான பாது​காப்பு நடவடிக்கையாக உரு​வாக்​கப்​பட்ட அந்​தி​யோதயா அன்ன யோஜனா திட்​டத்​தின் தற்​போதைய குடும்​பம் சார்ந்த ஒதுக்​கீட்டு முறை, குடும்​பத்​தின் அளவைப் பொறுத்து குறிப்​பிடத்​தக்க ஏற்றத்தாழ்​வு​களை ஏற்​படுத்​துகிறது.

புதிய மசோ​தா​வின்​படி, 2 உறுப்​பினர்​களைக் கொண்ட ஏஏஒய் குடும்​பத்​துக்கு மாதம் 14 கிலோ உணவு தானி​யம் கிடைக்​கும். அதே வேளை​யில், 5 அல்​லது அதற்கு மேற்​பட்ட உறுப்​பினர்​களைக் கொண்ட குடும்​பத்​துக்கு தற்​போதுள்ள அதி​கபட்ச வரம்​பான 35 கிலோ வழங்​கப்​படும்.

‘தேசிய உணவுப் பாது​காப்​புச் சட்​டம், 2013’ன் நோக்​கங்​களுக்கு இணங்க, மலிவு விலை​யில் தரமான மற்​றும் போது​மான அளவு உணவை உறுதி செய்​யும் மனித வாழ்க்​கைச் சுழற்சி அணுகு​முறை மூலம் உணவு மற்​றும் ஊட்​டச்​சத்து பாது​காப்பை வலுப்படுத்​தும் அரசின் பரந்த முயற்​சி​யின் ஒரு பகு​தி​யாகவே இந்தத் திருத்​தம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது” என கூறப்​பட்​டுள்​ளது.

அரிசி, கோதுமை இலவசம்: தற்​போது, முன்​னுரிமைக் குடும்பங்கள் மற்​றும் ஏஏஒய் குடும்​பங்​கள் ஆகிய இரு பிரிவினருக்​கும் அரிசி மற்​றும் கோதுமை இலவச​மாக வழங்கப்படு​கின்​றன என்பது குறிப்​பிடத்​தக்​கது.