惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
A
About on SuperTechFans
博客园 - 【当耐特】
Microsoft Security Blog
Microsoft Security Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
雷峰网
雷峰网
博客园_首页
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
IT之家
IT之家
博客园 - 叶小钗
Google DeepMind News
Google DeepMind News
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 聂微东
B
Blog RSS Feed
H
Help Net Security
Recent Announcements
Recent Announcements
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
DataBreaches.Net
L
LangChain Blog
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரி விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களுடன் தீவிர ஆலோசனை...
2026-05-08 · via hindutamil

Updated on

1 min read

புதுச்​சேரி: தமிழக அரசி​யலில் அசா​தாரண சூழல் நில​வும் நிலை​யில், புதுச்சேரி நட்​சத்​திர விடு​தி​யில் தமிழக அதி​முக எம்​எல்​ஏக்​கள் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, புதுச்சேரிக்கு நேற்று மாலை விரைந்து வந்​து, அங்கு தங்​கி​யிருந்த எம்​எல்​ஏக்​களு​டன் அவசர ஆலோ​சனை நடத்​தி​னார்.

தமிழகத்​தின் பிர​தான கட்​சிகளான திமுக, அதி​முகவை பின்​னுக்​குத் தள்ளி தமிழக வெற்​றிக் கழகம் தனித்து நின்று 108 இடங்​களில் வெற்றி பெற்​றிருக்​கிறது. ஆனால் தனி மெஜாரிட்டி கிடைக்​க​வில்​லை. காங்​கிரஸ் தனது 5 எம்​எல்​ஏக்​களின் ஆதரவை அளித்​திருக்​கிறது.

பிற கட்​சிகளின் ஆதரவை பெறு​வ​தில் தவெக தொடர்ந்து முயற்​சித்து வரு​கிறது. இந்த நிலை​யில் அதி​முக எம்​எல்​ஏக்​கள் புதுச்​சேரி பூர்​ணாங்​குப்​பத்​தில் உள்ள தனி​யார் ரிசார்ட்​டுக்கு வந்து தங்​கு​மாறு போன் மூலம் அக்​கட்சி தலைமை அறி​வுறுத்​தி​யது.

தொடர்ந்து நேற்று முன்​தினம் நள்​ளிரவு முதல் அதி​முக எம்​எல்​ஏக்​கள் ஒவ்​வொரு​வ​ராக வரத் தொடங்​கினர். அங்கு அவர்​கள் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். இந்த எம்​எல்​ஏக்​கள் தங்​கும் ஏற்​பாடு​களை சி.​வி.சண்​முகம் செய்​துள்​ளார்.

இதனிடையே அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று மாலை சென்​னை​யில் இருந்து புதுச்​சேரிக்கு வந்​தார். அவருடன் கே.பி.முனு​சாமி, எஸ்.பி.வேலுமணி, விஜய​பாஸ்​கர், அன்​பழகன் உள்​ளிட்​டோரும் வந்​தனர்.

புதுச்​சேரி நட்​சத்​திர விடு​தி​யில் தங்க வைக்​கப்​பட்​டிருந்த எம்​எல்​ஏக்​களு​டன் பழனி​சாமி ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டார். ஆலோ​சனை நடந்த அறை​யில் எம்​எல்​ஏக்​களுக்கு மட்​டும் அனு​மதி அளிக்​கப்​பட்​டது.

இரவு 7 மணிக்கு வந்த பழனி​சாமி 8.15 மணிக்கு புறப்​பட்​டார். அவர் அங்​கிருந்த 40-க்​கும் மேற்​பட்ட எம்​எல்​ஏக்​களிடம் முக்​கிய ஆலோ​சனை நடத்தி விட்டு சென்​ற​தாக​வும், அவர்​களிடம் கையெழுத்து வாங்​கிய​தாக​வும் தெரி​கிறது.

அதைத்​தொடர்ந்து செய்​தி​யாளர்​களை சந்​திக்​காமல் பழனி​சாமி புறப்​பட்​டார். முன்னதாக எம்​எல்​ஏக்​களிடம் ஆலோ​சனை நடத்​திய பழனி​சாமி, புதிய ஆட்சி அமைவ​தில் தற்​போது நில​வும் அசா​தாரண சூழலை குறிப்​பிட்​டதோடு, ‘நம்​மிடம் இரண்​டு​வித​மான வாய்ப்​பு​கள் உள்​ளன.

ஒன்​று, தவெகவை ஆதரிப்​பது அல்​லது வேறு​வித​மான கூட்​ட​ணியை (தி​முக ஆதர​வுடன்) உரு​வாக்​கு​வது’ என்று குறிப்​பிட்​டுள்​ளார். அப்​போது, எம்எல்ஏக்​கள் அவர​வர் கருத்​துகளைத் தெரிவிக்க, அதை மிக​வும் கூர்ந்து கவனித்து பழனி​சாமி உள்​வாங்​கிக் கொண்​ட​தாகச் சொல்​கிறார்​கள்.

இறு​தி​யாக, “பொறுத்​தால் சாதிக்​கலாம். யாரும் அவசரம் காட்​டத் தேவை​யில்​லை. நமக்கு நல்ல எதிர்​காலம் இருக்​கிறது. இரண்டு நாட்​கள் மட்​டும் காத்​திருங்​கள்” என்று அறி​வுரை கூறி​யிருக்​கிறார் பழனி​சாமி.

சட்​டப்​பேரவை குழுத் தலை​வ​ர்

முன்னதாக பழனிசாமி நடத்திய ஆலோசனை கூட்​டத்​தில் அதி​முக சட்​டப்​பேரவை குழுத் தலை​வ​ராக பழனி​சாமி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.