









தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க முன்வந்த போதுகூட பெரிதாக கவலைப்படாத திமுக, விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் வெளியில் இருந்து விஜய் அரசுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தபோது ரொம்பவே நொந்து போனது. இருந்தாலும் அவர்களை வாழ்த்தி வழியனுப்பியது திமுக.
ஆனால், அங்கே போனதும் விசிக-வும் முஸ்லிம் லீக்கும் அமைச்சரவையில் பங்கேற்கும் முடிவைப் பற்றி பேசியதும், இரு கட்சிகளும் அமைச்சரவையில் சேர சம்மதம் தெரிவித்ததும் திமுக தரப்பை ரொம்பவே யோசிக்கவைத்து விட்டது. ஆட்சியில் பங்கெடுத்தாலும் தாங்கள் திமுக கூட்டணியில் தொடர்வதாக இந்தக் கட்சிகள் விநோதம் பேசி வருகின்றன.
இந்தச் சூழலில், கட்சியின் அமைப்பு முறையில் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்வதற்கு உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகச் சொல்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர், “இனியும் காங்கிரஸையோ இண்டியா கூட்டணியையோ நம்புவதைவிட பேசாமல் பாஜக-வுடன் கைகோப்பதில் தவறில்லை என்றே தெரிகிறது” என்கிறார். இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。