惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
J
Java Code Geeks
小众软件
小众软件
D
Docker
腾讯CDC
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
V
V2EX
博客园 - 叶小钗
GbyAI
GbyAI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
B
Blog RSS Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 【当耐特】
IT之家
IT之家
博客园 - 司徒正美
M
MIT News - Artificial intelligence
T
The Blog of Author Tim Ferriss
The GitHub Blog
The GitHub Blog
罗磊的独立博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
L
LangChain Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
C
Check Point Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அயோத்தி ராமர் கோயிலில் ரூ.7 கோடி திருட்டு: சிறப்பு விசாரண...
ஆர்.ஷபிமுன்னா · 2026-06-15 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்​கப்​படும் நன்​கொடைகள், காணிக்​கை​களில் முறை​கேடு நடந்​த​தாக புகார்​கள் கிளம்​பின. இது​வரை சுமார் 7 கோடி ரூபாய் திருடப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்ளன.

இது குறித்து நீதி விசா​ரணை நடத்த வேண்​டும் என்று சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் சிங் யாதவ் வலி​யுறுத்​தி​னார். அயோத்​தி​யில் உள்ள துறவி​கள், இதர அரசி​யல் கட்​சித் தலை​வர்​களும் விமர்சனம் செய்​தனர். இந்த விவ​காரம் குறித்து பாஜக தலை​வர் டாக்​டர் ரஜ்னீஷ் சிங், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி விசா​ரணை நடத்த வலி​யுறுத்​தி​னார்.

ஆனால், இந்த புகார்​களை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்​கட்​டளை பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராய் திட்​ட​வட்​ட​மாக மறுத்து வந்​தார். இந்​நிலை​யில், அறக்​கட்​டளை பரிந்​துரை​யின்​படி சிறப்​புக் குழு விசா​ரணை நடத்த முதல்​வர் ஆதித்​ய​நாத் உத்​தர​விட்​டுள்​ளார். இந்​தக் குழு​வில் லக்னோ மண்டல ஆணை​யர் விஜய் விஸ்​வாஸ் பந்த்​, ஐஜி எஸ்​.கிரண், உ.பி. நிதித் துறை சிறப்​புச் செயலா​ளர் நீல் ரத்​தன் ஆகியோர் இடம் பெற்​றுள்​ளனர்.

இந்த அரசு குழு விசா​ரணை நடத்தி 7 நாட்​களுக்​குள் இடைக்​கால அறிக்கை உள்​ளது. முழு விசா​ரணை​யும் 15 நாட்​களுக்​குள் முடித்து இறுதி அறிக்கை அளிக்க உத்​தர​விடப்​பட்​டு உள்​ளது. இதற்​கிடை​யில், அயோத்​திக்கு அரு​கிலுள்ள மில்​கிபூரின் ரொடைவுலி தாக்​கூரன் கிராமத்​தைச் சேர்ந்த லவ்​கேஷ் மிஸ்ரா என்​பவர் சந்​தேக வலை​யில் சிக்​கி​யுள்​ளார். இவர் சுமார் 5 மாதங்களாக காணிக்கை பணம் எண்​ணும் குழு​வில் உறுப்​பின​ராக உள்ளார். கோயில் பணி​யில் சேர்ந்​தது முதல் அவரது வாழ்க்கை முறை​யில் பெரும் மாற்​றங்​கள் ஏற்​பட்​டுள்​ள​தாகக் கிராமத்​தினர் தெரி​வித்​துள்​ளனர்.

குறிப்​பாக அவர் சமீபத்​தில் ஒரு மதுக்​கடை​யில் ரூ.50,000-க்கு ஒரே நேரத்​தில் மது​ வகைகளை வாங்​கி​யுள்​ளார். இது குறித்து கிராம​வாசிகள் ராமர் கோயில் அறக்​கட்​டளை நிர்​வாகி​களிடம் புகார் அளித்​துள்​ளனர். இதையடுத்து தாக்​கூரன் கிராமத்​துக்கு நேற்​று ​முன்​தினம் சென்ற அயோத்தி காவல் துறை, ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா பொதுச் செய​லா​ளர் சம்​பத்​ராய், உறுப்​பினர் நிருபேந்​திர மிஸ்ரா ஆகியோரிடம் விசா​ரணை நடத்​தி​யுள்​ளனர். அப்​போது, லவ்​குஷ் மிஸ்ரா வீட்​டில், மறைத்து வைக்​கப்​பட்​டிருந்த ரூ.12 லட்​சம் ரொக்​கத்​தைப் போலீ​ஸார் பறி​முதல் செய்​துள்​ளனர்.

ராமர் கோயிலுக்கு மாதந்​தோறும் சராசரி​யாக 8 முதல் 9 கோடி ரூபாய் வரை நன்​கொடைகள் வரு​கின்​றன. ஒரு பெரிய குளிரூட்டப்​பட்ட அறை​யில் அன்​றாடம் பக்​தர்​கள் அளிக்​கும் காணிக்கை பணம் எண்​ணும் பணி நடை​பெறுகிறது. இங்கிருந்துதான் காணிக்கை தொகை மாய​மாகி வந்​த​தாகக் கூறப்​படு​கிறது. எனினும், இது​வரை​யிலும் இப்​பிரச்​சினை​யில்​ எந்த வழக்​கும்​ பதி​வாக​வில்​லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.