惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
大猫的无限游戏
大猫的无限游戏
J
Java Code Geeks
MongoDB | Blog
MongoDB | Blog
Martin Fowler
Martin Fowler
GbyAI
GbyAI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Recent Announcements
Recent Announcements
F
Fortinet All Blogs
B
Blog
U
Unit 42
B
Blog RSS Feed
D
DataBreaches.Net
Google DeepMind News
Google DeepMind News
人人都是产品经理
人人都是产品经理
腾讯CDC
量子位
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
V
Visual Studio Blog
博客园 - 聂微东
MyScale Blog
MyScale Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 三生石上(FineUI控件)
Engineering at Meta
Engineering at Meta

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அயோத்தி ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்பு மியாசாகி மாம்பழம் ப...
செய்திப்பிரிவு · 2026-06-17 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: அயோத்​தி​யில் எழுந்​தருளி​யுள்ள ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்​பிலான மியாசாகி மாம்பழம் படையல் இடப்​பட்​டது.

ஜப்​பானின் கியூஷு மாகாணம் மியா​சாகி நகரைத் தாயக​மாகக் கொண்ட இந்த மாம்​பழங்​கள், உலகிலேயே மிக விலை​யுயர்ந்த மாம்பழ வகை​யாகக் கருதப்​படு​கின்​றன. சர்​வ​தேசச் சந்​தை​யில் இதன் விலை ஒரு கிலோ ரூ.1.5 லட்​சம் முதல் ரூ.3.5 வரை லட்​சம் வரை விற்​பனை​யாகிறது.

இந்த வகை மாம்​பழங்​கள் பழுக்​கும் போது, வழக்​க​மான மாம்பழங்​களைப் போல மஞ்​சள் நிற​மாக மாறாமல், அடர் ஊதா அல்லது ரூபி-சிவப்பு நிறத்​தைப் பெறுகின்​றன. மேலும், ஜப்​பான் மக்கள் இதனைப் பாசத்​துடன் ‘சூரியனின் முட்​டை' (Taiyo-no-Tamago / Egg of the Sun) என்​றும் அழைக்​கின்​றனர்.

இந்த வகை மாம்​பழங்​கள் திறந்​தவெளி​யில் பயி​ரிடப்​ப​டா​மல், வெப்​பநிலை மற்​றும் சூரிய ஒளி கட்​டுப்​படுத்​தப்​பட்ட நவீன கண்ணாடி பசுமைக் குடில்​களில் மட்​டுமே வளர்க்​கப்​படு​கின்​றன. மேலும், ஜப்​பானிய வேளாண் அமைப்​பு​களின் கடுமை​யான தரக்​கட்​டுப்​பாட்​டின்​படி, ஒவ்​வொரு பழமும் குறைந்​த​பட்​சம் 350 கிராம் எடை​யும், 15 சதவீதத்​துக்​கும் அதி​க​மான சர்க்​கரை அளவும் கொண்​டிருந்​தால் மட்​டுமே ‘மி​யா​சாகி' என்ற பெயரில் சந்​தைப்​படுத்த அனு​ம​திக்​கப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில் உத்​தரபிரதேச மாநிலம் அயோத்​தி​யில் அமைந்துள்ள ராமருக்கு ரூ.1 லட்​சம் மதிப்​பிலான மியா​சாகி மாம்பழம் முதன்​முறை​யாக படைக்​கப்​பட்​டுள்​ளது. நேற்று முன்தினம் ராமருக்கு துளசி இலை​யுடன் இந்த வகை மியாசாகிபழம் படைக்​கப்​பட்​டது. ஒரு மாம்​பழத்​தின் விலை தற்போது ரூ.1 லட்​சமாகும்.

இவை அயோத்​தி​யிலுள்ள பிரத்​யேக தோட்​டத்​தில் விளைந்தவையாகும். ஓம்​பிர​காஷ் சிங் என்​பவரது தோட்​டத்​தில் விளைந்த இப்பழம் ராமருக்கு படைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து ஓம்​பிர​காஷ் சிங் கூறும்​போது, “இந்த மாம்பழங்கள் மிக​வும் விலை உயர்ந்​தவை​யாகும். மற்ற மாம்​பழங்​களின் சுவையைக் காட்​டிலும் இது கூடு​தல் சுவை மிக்​கது. அதிக நார்ச்​சத்​தும், வைட்​ட​மின் சத்​துகளும் கொண்​டது.

அயோத்​தி​யில் உள்ள தட்​பவெப்ப நிலைக்கு இந்த வகை மியாசாகி பழங்​கள் சிறப்​பாக விளை​கின்​றன. இந்த ஆண்டு 150 கிராம் எடை முதல் 300 கிராம் எடை வரையி​லான 12 மியா​சாகி மாம்​பழங்​கள் மரத்​தில் விளைந்​தன. முதல் மாம்​பழத்தை அயோத்தி ராமருக்கு படைத்​தேன்’’ என்​றார்.

கோயில் அறக்​கட்​டளை நிர்​வாகி மகந்த் சீதா​ராம் தாஸ் ஜி மகராஜ் கூறும்​போது, “இந்த வகை மாம்​பழம் கனிகளின் அரசன் என்று அழைக்​கப்​படு​கிறது. ஓம் பிர​காஷ் தோட்​டத்​தில் விளைந்த மியா​சாகி பழங்​கள் படைக்​கப்​பட்​டதை இன்று பார்த்​தேன். இந்த மாம்​பழத்​தின் நிறம் பிரபஞ்​சத்​துக்​கு ஒளியூட்​டும்​ சூரிய பகவானின்​ நிறத்​தை ஒத்​திருக்​கிறது’’ என்​றார்​.