惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
小众软件
小众软件
Recent Announcements
Recent Announcements
阮一峰的网络日志
阮一峰的网络日志
IT之家
IT之家
A
About on SuperTechFans
量子位
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
The Cloudflare Blog
博客园 - 【当耐特】
Hugging Face - Blog
Hugging Face - Blog
Y
Y Combinator Blog
J
Java Code Geeks
D
DataBreaches.Net
aimingoo的专栏
aimingoo的专栏
T
Tailwind CSS Blog
H
Help Net Security
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog
C
Check Point Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தொழில்ந...
2026-05-04 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: பொறியியல் கல்​லூரி​களில் பிஇ, பிடெக் இடங்​களில் சேரு​வதற்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம் என தொழில்​நுட்​பக் கல்​வித் துறை அறி​வித்​துள்​ளது.

தமிழகத்​தில் 440-க்​கும் மேற்​பட்ட பொறி​யியல் கல்​லூரி​கள் உள்​ளன. இங்கு வழங்​கப்​படும் பிஇ, பிடெக் படிப்​பு​களில் உள்ள சுமார் 1.70 லட்​சம் இடங்​கள் பொதுக் கலந்​தாய்வு மூலம் ஒற்​றைச் சாளர முறை​யில் நிரப்​பப்​படு​கின்​றன.

மாணவர் சேர்க்​கைப்பணி​களை தமிழக அரசு சார்​பில் மாநில தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் மேற்​கொள்​கிறது. இந்​நிலை​யில், வரும் 2026-27-ம் கல்வி ஆண்​டில் பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்​கான அறி​விப்பு நேற்று வெளி​யாகி​யுள்​ளது.

இதுகுறித்து தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநர் எஸ்​.​வி​சாகன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: தமிழகத்​தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறி​யியல் கல்​லூரி​கள், அண்ணா பல்​கலைக்​கழக வளாக பொறி​யியல் கல்​லூரி​கள், அண்​ணா​மலை பல்​கலைக்​கழகம் மற்​றும் சுயநிதி பொறி​யியல் கல்​லூரி​களில் அரசு ஒதுக்​கீட்​டின்​கீழ் பிஇ, பிடெக் இடங்​களில் சேரு​வதற்​கான கலந்​தாய்​வில் பங்​கேற்க ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு மே 3 (நேற்​று) முதல் ஜூன் 2-ம் தேதி வரை நடை​பெறும். www.tneaonline.org என்ற இணை​யதளத்​தில் ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க வேண்​டும்.

விண்​ணப்ப நடை​முறை, கால அட்​ட​வணை, சான்​றிதழ்​கள் பதிவேற்​றும் முறை (ஒலி - ஒளி வாயி​லாக), கடந்த 5 ஆண்​டு​களில் கல்​லூரி பாடப்​பிரிவு மற்​றும் வகுப்பு வாரி​யாக கட்​ஆஃப் மதிப்​பெண் மற்​றும் தரவரிசை விவரங்​கள், பொறி​யியல் சேர்க்கை சேவை மையங்​கள், சிறப்பு ஒதுக்​கீட்​டில் சேரு​வதற்​கான சான்​றிதழ் மாதிரி​கள் உள்​ளிட்ட தகவல்​களும் இணை​யதளத்​தில் உள்​ளன.

விண்​ணப்ப பதிவு கட்​ட​ணம் ரூ.500. எஸ்​சி, எஸ்​சி-அருந்​த​தி​யர், எஸ்டி பிரி​வினருக்கு ரூ.250. இணை​யதள வசதி இல்​லாதவர்​கள் பயன்​பெறும் வகை​யில் தமிழகம் முழு​வதும் 110 பொறி​யியல் சேர்க்கை சேவை மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அவற்​றின் முகவரி, தொடர்பு எண்​கள் இணை​யதளத்​தில் தரப்​பட்​டுள்​ளன.

பொறி​யியல் படிப்​புக்கு விண்​ணப்​பிக்​கும் மாணவர்​களின் சந்​தேகங்​கள், கேள்வி​களுக்கு விளக்​கம் அளிக்க தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககத்​தில் சிறப்பு அழைப்பு மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. 1800-425-0110 என்ற எண்​ணில் இந்த மையத்தை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்​ளலாம்​. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.