惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Hugging Face - Blog
Hugging Face - Blog
量子位
H
Help Net Security
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
爱范儿
爱范儿
博客园 - 【当耐特】
Vercel News
Vercel News
S
SegmentFault 最新的问题
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
GbyAI
GbyAI
博客园 - 叶小钗
博客园_首页
V
Visual Studio Blog
宝玉的分享
宝玉的分享
B
Blog
MyScale Blog
MyScale Blog
C
Check Point Blog
博客园 - 三生石上(FineUI控件)
L
LangChain Blog
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் போ...
செய்திப்பிரிவு · 2026-06-01 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘வணிக காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 5 மாதங்களாக வணிகப் பயன்பாடு காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளும் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வணிக சிலிண்டர் விலை உயர்வு சிறுதொழில்களின் கழுத்தை நெரிக்கும் செயலாக உள்ளது.

இதற்கிடையே இன்று (ஜூன் 1) அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் உயர்வு ஆகியவற்றால், வணிக சிலிண்டரின் விலை கடந்த 5 மாதங்களில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இதனால் உணவகங்கள், தேநீர்க் கடைகள், சிறு, குறு உணவுத் தொழில் செய்வோர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

டீசல் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்துச் செலவுகளை உடனடியாக உயர்த்தும். இதன் நேரடி விளைவாக பால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து, சாமான்ய மக்கள் அன்றாட உணவுக்கே திண்டாடும் அவலநிலை ஏற்படும்.

எனவே, உயர்த்தப்பட்ட வணிக சிலிண்டர், பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலைகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சிறு உணவகங்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு அரசு சிறப்பு மானியங்களை வழங்க வேண்டும். தொடர் விலையேற்றத்தை மத்திய அரசு உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், பொதுமக்களைத் திரட்டி, மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.