

























கோவை: கோவையில், சோலார் பிளான்ட் வளாகத்தில் நெட் மீட்டர் பொருத்த அனுமதி வழங்க ரூ.90 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
கோவையைச் சேர்ந்தவர் தீபன். சரவணம்பட்டியில் சோலார் பிளான்ட்டுக்கு நெட் மீட்டர் பொருத்த மின்வாரியத்தின் அனுமதி கேட்டு, சரவணம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது உதவி செயற்பொறியாளர் எம்.கதிர்வேல் ரூ.90 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்தனுப்பினர். இதனை கதிர்வேல் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。