





















மேலும், உயர் அதிகாரிகள் அடியோடு மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டார். அங்கு பணியிலிருந்த அபின் தினேஷ் மோடக்குக்கு சிபிசிஐடி பிரிவு கூடுதல் டிஜிபி பணி வழங்கப்பட்டது. அதோடு, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளுக்கும், அடுத்தடுத்து பணியிடம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அன்பு ஆகியோர் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, உள்துறை செயலர் மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறி யிருப்பதாவது: தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக இருந்த மகேஷ்வர் தயாள் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி-யாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் டிஜிபி அருண் ஊழல் தடுப்பு மற்றும்லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குநராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்.அன்பு மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல்டிஜிபி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。