惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
量子位
大猫的无限游戏
大猫的无限游戏
Hugging Face - Blog
Hugging Face - Blog
S
SegmentFault 最新的问题
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
Google DeepMind News
Google DeepMind News
小众软件
小众软件
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog RSS Feed
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog
博客园 - 聂微东
The GitHub Blog
The GitHub Blog
Recent Announcements
Recent Announcements
Y
Y Combinator Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
雷峰网
雷峰网
Jina AI
Jina AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
போதைப் பொருள் புழக்கம் பற்றி தகவல் கொடுங்கள்: மாணவர்களுக்...
செய்திப்பிரிவு · 2026-06-25 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘‘போதைப் பொருள்கள் நடமாட்டம் குறித்த தகவல்களைப் போலீஸாருக்கு மாணவர்கள் தெரிவிக்க வேண்டும். போதை கடத்துபவர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துகளை முடக்குவது உட்பட கடும் நடவடிக்கை எடுப்போம்’’ என்று டிஜிபி மகேஷ்குமார் அகர்​வால் எச்​சரித்​துள்​ளார்.

சென்னை வேளச்​சேரி​யில் உள்ள ஒரு தனி​யார் கல்​லூரி​யில் உலக போதைப் பொருள் எதிர்ப்பு தின நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சிக்​குத் தமிழக காவல் துறை மது விலக்கு அமலாக்​கப் பிரிவு கூடு​தல் டிஜிபி சங்​கர் தலைமை தாங்​கி​னார். நிகழ்ச்​சி​யில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற டிஜிபி மகேஷ்கு​மார் அகர்​வால் பேசி​ய​தாவது:

கஞ்​சா, செயற்கை போதைப் பொருள்​கள் தமிழகத்​தில் தயாரிக்கப்​படு​வ​தில்​லை. அவை பிற மாநிலங்​களில் இருந்து கடத்தி வரப்​படு​கின்​றன. நாட்​டின் செல்​வ​மாக இருக்​கும் மாணவர்​கள், கஞ்சா மற்​றும் செயற்கை போதைப் பொருள்களுக்கு இரை​யாக வேண்​டாம். சமூக ஊடகங்​கள், போதைப் பொருள் ஆகிய இரண்டு விஷங்​களுக்கு இன்​றைய இளைஞர்​கள் அடிமை​யாகின்​றனர்.

போதைப் பொருட்​களைப் பயன்​படுத்​தி​னால், மாணவர்​களின் கல்வி பாதிப்​பதுடன் குடும்ப வாழ்க்​கை​யும் பாழாகி​விடும். எதிர்​கால கனவு சிதைந்து விடும். நட்பு வட்​டத்​தில் மாணவர்​கள் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும். தேர்​வு, வேலை உள்​ளிட்ட சில விஷ​யங்​களால் மன அழுத்​தத்​தில் சிக்​கும் இளைஞர்​கள், போதையின் பக்​கம் செல்ல வேண்​டாம். மாறாக மன அழுத்தத்தில் இருந்து விடுபட விளை​யாட்​டு, யோகா, நடனம் போன்றவற்றில் கவனம் செலுத்தி தங்​களது திறனையும் வளர்த்துக் கொள்​ளலாம்.

விளை​யாட்​டு வேண்டாம்

சிலர் விளை​யாட்​டாக​வும், சிலர் உள்​நோக்​கத்​துடன் போதைப் பொருளைப் பயன்​படுத்​து​மாறு இளைஞர்​களிட​மும் மாணவர்​களிட​மும் பரிந்​துரை செய்​கின்​றனர். அவர்​களிடம் இளைஞர்​கள், போதைப் பொருள் எனக்கு வேண்​டாம், நமக்கு வேண்​டாம் என்று உறு​தி​யாக கூறுங்​கள். போதைப் பொருள்​களை விற்​பவர்​கள், மாணவர்​களை குறி வைத்​து, அவர்​கள் முன்​னேற்​றப் பாதை​யில் செல்ல விடா​மல் தடுக்​கின்​றனர். மேலும் இப்​படிப்​பட்ட நபர்​களை, இளைஞர்​களும், மாணவர்​களும் நிராகரிக்க வேண்​டும்.

எதிர்காலம் மோசமாகும்

அறி​யாமை​யால் இளைஞர்​கள் போதைப் பொருளைப் பயன்​படுத்​தி​னால், அவர்​களது எதிர்​காலம் மோச​மான​தாகி​விடும். மேலும் அவர்​கள் கடுமை​யான விளைவு​களைச் சந்​திக்​க​வும் நேரிடும். நமது மாநிலம், கல்வி மற்​றும் தொழில் துறை​யில் சிறந்து விளங்​கும் வேளை​யில், இளைஞர்​களிடையே போதைப் பழக்​கம் அதி​கரிப்​பது பொருளா​தார வளர்ச்​சிப் பாதை​யில் ஒரு கேள்விக்​குறியை உரு​வாக்கி விடும். போதைப் பொருட்​களைத் தடுப்​ப​தில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரு​கிறது. இவ்​வாறு டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் பேசி​னார்

முன்​ன​தாக நிகழ்ச்​சி​யில் மாணவர்​களு​டன் டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் கலந்​துரை​யாடி​னார். அப்​போது, ‘‘தமிழகத்​தில் பல இடங்​களில் போதைப் பொருட்​கள் நடமாட்​டம் சர்வ சாதாரணமாக உள்​ளது. அதை காவல் துறை​யால் முற்​றி​லும் தடுக்க முடி​யு​மா?’’ என்று மாணவர்​கள் கேள்வி எழுப்​பினர்.

அதற்கு பதில் அளித்த டிஜிபி மகேஷ்குமார் கூறிய​தாவது: போதைப் பொருள்​களை ஒழிப்​ப​தில் மாணவர்​களும் பங்​கேற்க வேண்​டும். எங்​கெல்​லாம் போதை நடமாட்​டம் உள்​ளது என்​பது குறித்த தகவல்​களைத் தைரிய​மாக போலீஸுக்​குத் தகவல் கொடுங்​கள். நாங்​கள் கடும் நடவடிக்கை எடுக்​கிறோம்.

போதைப் பொருள் விற்​பனை மற்​றும் கடத்​தலில் ஈடு​படு​பவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். அவர்​களு​டைய வங்கி கணக்​கு​கள் மற்​றும் சொத்​துகளை முடக்​கும் நடவடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​படும். போதைப் பொருள் இல்​லாத தமிழகத்தை உரு​வாக்க அரசு மற்​றும் காவல் துறை தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்​கொண்​டு வரு​கிறது. இவ்​வாறு டிஜிபி மகேஷ் குமார்​ அகர்​வால்​ கூறி​னார்​.