惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
博客园 - 司徒正美
美团技术团队
Martin Fowler
Martin Fowler
雷峰网
雷峰网
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 三生石上(FineUI控件)
Vercel News
Vercel News
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
爱范儿
爱范儿
U
Unit 42
Y
Y Combinator Blog
月光博客
月光博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
GbyAI
GbyAI
H
Help Net Security
量子位
Last Week in AI
Last Week in AI
博客园_首页
腾讯CDC
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பணி ஆணை வழங்கப்படாததால் டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட...
2026-05-21 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ​​தி​முக ஆட்​சி​யில் தேர்ந்​தெடுக்​கப்​பட்டு பணி நியமன ஆணை வழங்​கப்​ப​டாத 751 மருத்துவர்கள் சென்னை டிஎம்​எஸ் அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்டு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தமிழகத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களில் காலி​யாக​வுள்ள 1,100 உதவி மருத்​து​வர்​கள் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான அறி​விப்​பை, தமிழ்​நாடு மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் (எம்​ஆர்​பி) கடந்த 2025-ம் ஆண்டு நவம்​பர் 21-ம் தேதி வெளி​யிட்​டது.

இதற்​கான தேர்வு கடந்த ஜனவரி 25-ம் தேதி நடந்​தது. விண்​ணப்​பித்​திருந்த 25,172 பேரில் 20,867 பேர் தேர்​வில் பங்​கேற்​றனர். அவர்​களில் 16,986 பேர் தேர்ச்சி பெற்​றனர். தேர்ச்சி பெற்​றவர்​களின் சான்​றிதழ்​கள் சரி​பார்ப்​பு, இட ஒதுக்​கீடு முறை​யில் 1,071 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

இவர்​களை கலந்​தாய்வு மூலம் பணி​யில் சேர்ப்​ப​தற்​கான பணி​கள் நடந்​தன. 320 பேருக்கு ஆணை வழங்​கப்​பட்​டது. பின் காலி​யிடங்​கள் இல்லை என 751 பேருக்கு பணி ஆணை வழங்​கப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான புதிய ஆட்சி வந்​துள்​ள​தால், ஏற்​கெனவே ஆவணங்​கள் சரி​பார்க்​கப்​பட்​டு, தேர்வு செய்​யப்​பட்ட 751 பேருக்​கும் பணி நியமன ஆணை வழங்க வேண்​டும் என மருத்​து​வர்​கள் சென்னை தேனாம்​பேட்​டை​யில் உள்ள டிஎம்​எஸ் அலு​வல​கத்தை நேற்று முற்​றுகை​யிட்​டனர்.

அவர்​களு​டன் அரசு அதி​காரி​கள் நடத்​திய பேச்​சு​வார்த்தை உடன்​பாடு ஏற்​ப​டாத​தால், தலை​மைச் செயல​கம் சென்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜை மருத்​து​வர்​கள் சந்​தித்து முறை​யிட்​டனர்.

இது தொடர்​பாக மருத்​து​வர்​கள் கூறுகை​யில், ``இந்த சம்​பவத்தை அதி​காரி​கள் அமைச்​சர் கவனத்​துக்கு எடுத்​துச் செல்​லாமல் இருந்​தனர். நாங்​கள் நடந்​ததை அமைச்​சரிடம் தெரி​வித்​தோம்.

அவர் ஒரு மாதத்​துக்​குள் 370 பேர் வரை பணி நியமனம் செய்​வ​தாக உறு​தி​யளித்​துள்​ளார்​. மற்​றவர்​களும்​ ​காலிப்​பணி​யிடங்​களுக்​கு ஏற்​ப நிரப்​பப்​படு​வர்​ எனத்​ தெரி​வித்​துள்​ளார்​'' என்​றனர்​.