惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
博客园_首页
IT之家
IT之家
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Vercel News
Vercel News
美团技术团队
D
Docker
WordPress大学
WordPress大学
T
Tailwind CSS Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
The Cloudflare Blog
Y
Y Combinator Blog
F
Fortinet All Blogs
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
G
Google Developers Blog
爱范儿
爱范儿
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
月光博客
月光博客
MongoDB | Blog
MongoDB | Blog
S
SegmentFault 最新的问题
GbyAI
GbyAI
Hugging Face - Blog
Hugging Face - Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்​புள்ளி வைக்​குமா பஞ்ச...
2026-05-14 · via hindutamil

Updated on

2 min read

தரம்​சாலா: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலா​வில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்​தி​யன்ஸ் அணி​கள் மோதுகின்​றன. ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி முதல் 7 ஆட்​டங்​களில் தோல்வியை சந்​திக்​காமல் வலம் வந்​தது. ஆனால் கடைசி​யாக விளை​யாடிய 4 ஆட்​டங்​களி​லும் அந்த அணி தோல்​வியை சந்தித்துள்​ளது.

13 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்ள பஞ்​சாப் அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேற வேண்​டு​மா​னால் இன்​றைய ஆட்டம் உட்பட எஞ்​சி​யுள்ள 3 ஆட்​டங்​களில் 2-ல் வெற்றி பெற வேண்​டும் என்ற நெருக்​கடிக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது. தொடரின் முதல் பாதி​யில், மிகச்​சிறந்த ஃபார்​மில் இருந்த பேட்​டிங் வரிசை, பந்​து​வீச்சு துறையில் இருந்த பலவீனங்​களை மறைத்​தது. ஆனால் சமீப​கால​மாக சவாலான இலக்கை நிர்​ண​யித்த பிறகும் கூட மோச​மான பந்​து​வீச்சு காரண​மாக வெற்​றியை வசப்​படுத்த முடியாத சூழ்​நிலை பஞ்​சாப் அணிக்கு உரு​வாகி உள்​ளது.

கடைசி​யாக டெல்லி அணிக்கு எதி​ராக தரம்​சாலா ஆடு​களத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் பஞ்​சாப் அணி 210 ரன்​கள் குவித்​தும் தோல்​வியை சந்​தித்து இருந்​தது. வேகப்​பந்து வீச்​சுக்கு சாதகமாக இருந்த அந்த ஆடு​களத்​தில் கடைசி ஐந்து ஓவர்​களில் பஞ்​சாப் அணி​யின் வேகப்​பந்து வீச்​சாளர்​களால் பந்​துகளைச் சரி​யான நீளத்​தில் வீச முடிய​வில்​லை. அர்​ஷ்தீப் சிங்கை உள்​ளடக்​கிய அந்த அணி​யின் வேகப்​பந்து வீச்சு துறை இந்​தத் தொடரில் உள்ள 10 அணி​களில் அதி​க​மான ரன்​களை தாரை​வார்த்​துள்​ளது.

ஐபிஎல் தொடரின் முதல் பாதி​யில் சேவியர் பார்ட்​லெட், அர்​ஷ்தீப் சிங் கூட்​டணி புதிய பந்​தில் நிலை​யான செயல் திறனை வழங்கியது. ஆனால் தற்​போது லாக்கி பெர்​குசன் வரு​கை​யால் அந்​தச் சமநிலை குலைந்​துள்​ளது; பெர்​குசன் பொது​வாக மிடில் மற்​றும் இறு​திக்​கட்ட ஓவர்​களி​லேயே சிறப்​பாக செயல்படக்கூடியவர். கடந்த போட்​டி​யில் பென் டுவார்​ஷூ​யிஸை சேர்த்​ததன் மூலம் 3 இடதுகை வேகப்​பந்து வீச்​சாளர்​களு​டன் களம் இறங்​கி​னார்​கள். ஆனால் இவர்​கள் அதிக ரன்​களை தாரை வார்த்​தனர்.

இதில் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான அர்​ஷ்தீப் சிங் நடப்பு சீசனில் விளை​யாடிய 11 போட்​டிகளில் பெரும்​பாலானவற்​றில் ஓவருக்கு சராசரி​யாக 10 ரன்​களுக்கு மேல் விட்​டுக்​கொடுத்துள்ளார். டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் பஞ்​சாப் அணி சுழற்​பந்து வீச்சை பயன்​படுத்​த​வில்​லை. இது​வும் அந்த அணி​யின் தோல்விக்கு காரண​மாக இருந்​த​தாக விமர்​சனங்​கள் எழுந்​தன. இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் யுவேந்தி சாஹல் களமிறக்​கப்​படக்​கூடும். பேட்​டிங்​கைப் பொறுத்​தவரை டாப் ஆர்டரில் பிரியன்ஷ் ஆர்யா அதிரடி தொடக்​கம் கொடுத்து வருகிறார்.

அதேவேளை​யில் கடந்த சில ஆட்​டங்​களாக பிரப்​சிம்​ரன் சிங்கிடம் இருந்து பெரிய அளவிலான தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய செயல்திறன் வெளிப்​பட​வில்​லை. இதனால் அவர், மீண்​டும் மட்டையை சுழற்​று​வ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். கடந்த ஆட்​டத்​தில் 36 பந்​துகளில் 59 ரன்​கள் விளாசிய ஸ்ரேயஸ் ஐயரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்​படக்​கூடும். ஃபீல்​டிங்​கிலும் பஞ்​சாப் அணி மிகப்​பெரிய முன்​னேற்​றம் காணவேண்​டியது அவசி​ய​மாகும்.

5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​து​விட்​டது. அந்த அணி 11 ஆட்​டங்​களில் 3 வெற்​றி, 8 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று 9-வது இடத்​தில் உள்​ளது. எஞ்​சி​யுள்ள ஆட்​டங்​களில் ஆறு​தல் வெற்றிகளை பெறு​வ​தில்​ அந்​த அணி கவனம் செலுத்தக்கூடும். இதற்​கிடையே இன்​றைய ஆட்​டம் மழை காரண​மாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. ஏனெனில் நேற்று மழை காரண​மாக இரு அணி​களின் பயிற்​சி​யும் பாதிக்​கப்​பட்டு இருந்​தது.