


























பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர்
Updated on:
திருவனந்தபுரம்: கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியின் வி.டி.சதீஷன் முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், கேரளாவில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, குறைந்த ஆல்கஹால் கொண்ட மது பானங்களுக்கான வரி 251-லிருந்து 121 சதவீதமாகக் குறைக்கப்பட உள்ளது.
இது குறித்து ‘சமஸ்தா கேரளா ஜெம்-இய்யத்துல் உலமா' அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ”போதைப் பொருள் மற்றும் இதர போதை வஸ்துகளின் பயன்பாட்டுக்கு எதிராகப் போராடி வரும் வேளையில், இதை வெறும் ‘வரிச் சீர்திருத்தம்' என்று கூறி ஒதுக்கிவிட முடியாது” என்று தெரிவித்துள்ளது.
மேலும் பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், ”அவசர அவசரமாக இந்த கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பொது மக்கள் நலன் சார்ந்த கோப்புகள் வாரக் கணக்கிலும் மாதக் கணக்கிலும் காத்திருக்கின்றன. ஆனால், ஒரு பன்னாட்டு மதுபான நிறுவனத்துக்கு பயனளிக்கும் கோப்பு மட்டும் மின்னல் வேகத்தில் நகர்கிறது. இந்த முடிவினால் யாருக்கு லாபம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。