惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
G
Google Developers Blog
V
V2EX
美团技术团队
H
Help Net Security
月光博客
月光博客
爱范儿
爱范儿
Engineering at Meta
Engineering at Meta
The Cloudflare Blog
U
Unit 42
大猫的无限游戏
大猫的无限游戏
Recent Announcements
Recent Announcements
A
About on SuperTechFans
博客园 - Franky
The GitHub Blog
The GitHub Blog
N
Netflix TechBlog - Medium
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 司徒正美
MyScale Blog
MyScale Blog
B
Blog
雷峰网
雷峰网
Y
Y Combinator Blog
云风的 BLOG
云风的 BLOG
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைதான தலைமைக் ...
செய்திப்பிரிவு · 2026-05-30 · via hindutamil

Updated on: 

சென்னை: சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடு​பட்​ட​தாக கைதான தலை​மைக் காவலரை பணிநீக்கம் செய்து சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டுள்​ளார்.

கன்​னி​யாகுமரி மாவட்​டம் நாகர்​கோ​விலை சேர்ந்த 16 வயது சிறு​வன் (11-ம் வகுப்பு மாணவன்) கடந்த 25-ம் தேதி தனது பெற்​றோருடன் சென்னை கோடம்​பாக்​கத்​தில் உள்ள உறவின​ரான குமரேசன் (39) என்​பவரது வீட்​டுக்கு வந்​திருந்​தார்.

பெற்​றோர் சொந்த ஊருக்கு திரும்​பினர். ஆனால், சிறு​வன் மட்​டும் உறவினர் வீட்​டில் 2 நாள் தங்​கி​யிருந்து வரு​வ​தாக கூறிய​தால் அவரை மட்​டும் அங்கு விட்டு சென்​றனர்.

இந்​நிலை​யில் 27-ம் தேதி இரவு குமரேசன், தனது நண்​ப​ரான சென்னை வடபழனி காவல் நிலைய குற்​றப்​பிரி​வில் தலை​மைக் காவல​ராக பணிபுரி​யும் வேலப்​பன் (35) என்​பவரை வீட்​டுக்கு அழைத்து அவருடன் மது அருந்​தி​னார்.

போதை​யில் இருந்த வேலப்​பன், அரு​கில் தூங்​கிக் கொண்​டிருந்த சிறு​வனை எழுப்பி அவரது வாயில் வலுக்​கட்​டாய​மாக மதுவை ஊற்​றியதோடு, பாலியல் தொந்​தர​வும் கொடுத்​துள்​ளார்.

இதனால், பயமும் அதிர்ச்​சி​யும் அடைந்த சிறு​வன் கத்தி கூச்​சலிட்​டதோடு, அரு​கில் இருந்த டிவி ரிமோட்​டால் வேலப்​பனின் தலை​யில் தாக்​கி​விட்டு வீட்டை வெளிப்​புற​மாக பூட்டி தப்​பி​னார்.

மேலும், அவர் அசோக்​நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்​துக்கு சென்​று, நடந்த சம்​பவத்தை கூறி கதறி அழுதுள்​ளார். இதையடுத்​து, போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து வேலப்​பனை காவல் நிலை​யம் அழைத்து வந்து விசா​ரித்​தனர்.

இதில், சிறு​வன் கூறிய குற்​றச்​சாட்டு உண்மை என தெரிய​வந்​ததையடுத்​து, வேலப்​பனை போக்சோ உட்பட மேலும் சில பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிந்து நேற்று முன்​தினம் கைது செய்து புழல் சிறை​யில் அடைத்​தனர்.

இதையடுத்​து, அவர் பணி​யிடை நீக்​க​மும் செய்​யப்​பட்​டார். இந்​நிலை​யில், அவரை பணி நீக்​கம் செய்து சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டார்.