惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
宝玉的分享
宝玉的分享
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 司徒正美
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
IT之家
IT之家
H
Help Net Security
雷峰网
雷峰网
M
MIT News - Artificial intelligence
Microsoft Security Blog
Microsoft Security Blog
美团技术团队
GbyAI
GbyAI
博客园_首页
博客园 - 三生石上(FineUI控件)
T
Tailwind CSS Blog
I
InfoQ
小众软件
小众软件
Google DeepMind News
Google DeepMind News
D
Docker
Engineering at Meta
Engineering at Meta
WordPress大学
WordPress大学
博客园 - Franky
Hugging Face - Blog
Hugging Face - Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு ஆசியா, உக்ரைன் மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் த...
மோகன் கணபதி · 2026-05-18 · via hindutamil

நார்வே மன்னரிடம் இருந்து விருதைப் பெறும் பிரதமர் மோடி

Updated on: 

ஒஸ்லோ(நார்வே): மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றம் ராஜதந்திரத்தின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

நார்வே நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இருதரப்பு உறவு தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தையை மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவும் நார்வேயும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு, பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளன. எந்தவொரு பிரச்சினையையும் ராணுவ மோதல் மூலம் மட்டும் தீர்க்க முடியாது என்பதில் நாங்கள் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம்.

உக்ரைனாக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவும், அமைதியை நிலைநாட்டவும் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்.

வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு, உலகளாவிய நிறுவனங்களைச் சீர்திருத்துவது அவசியம் என்ற விஷயத்திலும் நாங்கள் உடன்படுகிறோம்.

மேலும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வேரோடு ஒழிப்பது நமது பகிரப்பட்ட உறுதிப்படாகும். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் நார்வே இந்தியாவுக்கு அளித்த ஆதரவு பாராட்டுக்குரியது.

நான் கடந்த ஆண்டே நார்வே வருவதாக இருந்தேன். ஆனால், பஹல்காம் தாக்குதல் காரணமாக அந்த பயணத்தை ஒத்திவைக்க வேண்டியதாயிற்று. அந்த இக்கட்டான நேரத்தில் நார்வே பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் உறுதியாக நின்று, உண்மையான நட்பை வெளிப்படுத்தியது. இன்று நான் நார்வேக்கு வருகை தரும்போது அந்த ஒற்றுமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியா தலைமையிலான இந்தோ - பசுபிக் பெருங்கடல் முன்முயற்சியில் இணைய நார்வே முடிவு செய்துள்ளது. இரண்டு முக்கிய கடல்சார் நாடுகளான இந்தியாவும் நார்வேயும் கடல்சார் பொருளாதாரம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்” என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, நார்வே தனது உயரிய விருதான ராயல் வார்வேயன் ஆர்டர் ஆஃப் மெரிட் இன் கிராண்ட் கிராஸ் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியது. நார்வே மன்னர் ஹரால்டு வி இவ்விருதை வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி பெறும் 32வது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.