惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
量子位
Recent Announcements
Recent Announcements
T
The Blog of Author Tim Ferriss
美团技术团队
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Help Net Security
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - Franky
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享
大猫的无限游戏
大猫的无限游戏
V
Visual Studio Blog
博客园 - 聂微东
aimingoo的专栏
aimingoo的专栏
Microsoft Security Blog
Microsoft Security Blog
U
Unit 42
J
Java Code Geeks
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
IT之家
IT之家
Hugging Face - Blog
Hugging Face - Blog
腾讯CDC
L
LangChain Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்த ...
2026-05-15 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை கிடைக்க வசதியாக ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இந்தியா முழுவதும் அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. இதன் மூலம் சாதாரண வகை நெல்லின் விலை ரூ.2,441 ஆக உயரும். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த உயர்வு போதுமானதல்ல.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சாதாரண வகை நெல்லின் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,441 ஆகவும், சன்ன வகை நெல்லுக்கான விலையை ரூ.2,461 ஆகவும் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் இந்த இரு வகை நெல்களுக்கான கொள்முதல் விலை முறையே ரூ.2,369 ஆகவும், ரூ.2,389 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் குவிண்டாலுக்கு ரூ.72 மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் விலையுடன் ஒப்பிடும் போது இந்த விலை உயர்வு வெறும் 3 % மட்டும் தான். கடந்த ஆண்டில் நெல் கொள்முதல் விலையை 3 %, அதாவது குவிண்டாலுக்கு ரூ.69 உயர்த்திய மத்திய அரசு, நடப்பாண்டும் அதே அளவிலேயே உயர்த்தியுள்ளது. நெல்லின் உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு.

நெல்லுக்கான உற்பத்திச் செலவுடன், எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி, 50 % லாபம் சேர்த்து கொள்முதல் விலை வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல்லை உற்பத்தி செய்ய ரூ.2,300-க்கும் கூடுதலாக செலவாவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படும் நிலையில், அதை விட குவிண்டாலுக்கு ரூ.141 மட்டும் உயர்த்தி வழங்குவது எந்த வகையில் நியாயம் ?

கிட்டத்தட்ட உற்பத்திச் செலவுக்கு இணையாகவே கொள்முதல் விலையும் நிர்ணயிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு லாபமே கிடைக்காது. வட்டிக்கு கடன் வாங்கி வேளாண்மை செய்யும் விவசாயிகள், போதிய லாபம் கிடைக்காவிட்டால் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வர். இது தவிர்க்கப்பட வேண்டும்.

நெல் கொள்முதல் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு காரணம், அதற்கான உற்பத்திச் செலவு முறையாக கணக்கிடப்படாதது தான். நெல்லுக்கான உற்பத்திச் செலவை கணக்கிடும் போது, நிலத்தை தயார் செய்தல், விதை மற்றும் நடவு, உரங்கள், நீர்ப் பாய்ச்சுதல், களை எடுத்தல், பயிர்ப் பாதுகாப்பு, அறுவடை செய்தல் ஆகிய செலவுகளுடன் நிலத்திற்கான குத்தகை மதிப்பு, பணியாளர்களுக்கான கூலி ஆகியவையும் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்.

ஆனால், தொழிலாளர்கள் கூலி, குத்தகை உள்ளிட்ட பல செலவுகளை மத்திய அரசு கணக்கில் சேர்க்காதது தான் நெல் கொள்முதல் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட காரணம் ஆகும். இந்தக் குறைகளை களைந்து நெல்லுக்கான விலையை மத்திய அரசு உயர்த்த வேண்டும்.

மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் நெல் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருக்கும் போது, அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஓரளவாவது சரி செய்வதற்காகத் தான் மாநில அரசுகளின் மூலம் ஊக்கத் தொகை வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால், கடந்த ஆட்சியின் ஐந்தாண்டு காலத்தில் கொள்முதல் விலைக்கான ஊக்கத்தொகை வெறும் ரூ.51 மட்டுமே உயர்த்தப்பட்டது. அதனால் தான் நடப்பாண்டில் நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500 என்ற அளவை தாண்டவில்லை.

விவசாயிகளுக்கு செய்த துரோகத்திற்காக திமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசும் அதே துரோகத்தைத் தொடரக் கூடாது. ஒடிசா அரசு ஒரு குவிண்டாலுக்கு ரூ.800, ஆந்திரம் மற்றும் தெலுங்கானா ரூ.500 வீதம் ஊக்கத் தொகை வழங்குகின்றன. அண்டை மாநிலமான கேரளத்தை ஆட்சி செய்த இடது சாரி அரசு குவிண்டாலுக்கு ரூ.631 ஊக்கத்தொகை வழங்கியது. ஆனால், அதை ரூ.500 குறைவாகத் தான் முந்தைய திமுக அரசு வழங்கியது. விவசாயிகளுக்கு திருப்தியளிக்கும் வகையில் ஊக்கத்தொகை உயர்த்தப்பட வேண்டும்.

நெல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்குவதால், தமிழக அரசுக்கு பெரிய நிதிச் சுமை ஏற்படாது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில், குவிண்டாலுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை வழங்க அரசின் சார்பில் ரூ.1,059 ஊக்கத் தொகை வழங்க வேண்டும். அதற்காக அரசுக்கு ரூ.4,196 கோடி மட்டுமே செலவாகும். நடப்பாண்டில் குவிண்டாலுக்கு ரூ.131 வீதம் ஊக்கத் தொகை வழங்க ரூ.524 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை போக ஆண்டுக்கு ரூ.3,672 கோடி மட்டும் தான் கூடுதலாக செலவாகும்.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுக்கு ரூ.4.50 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், இந்தத் தொகை ஒரு விழுக்காட்டுக்கும் குறைவு தான். எனவே, விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை கிடைக்க வசதியாக ஊக்கத் தொகையை ரூ.1,059 ஆக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.