




















இடது: கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி | வலது: கைதான கார்த்தி, மோகன் படம்: ஜெ.மனோகரன்
Updated on
:
2 min read
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அருகே போத்தனூர் செட்டிபாளையத்தில் வசித்து வந்த தம்பதியருக்கு 10 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில் தந்தை சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள வெல்டிங் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக பணி செய்து வந்தார். தொடர்ந்து தனது பணியிடத்துக்கு அருகே வீட்டை மாற்ற நினைத்து, பள்ளபாளையத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு குடியேறினார்.
இந்த நிலையில், கடந்த 21-ம் தேதி மாலை தம்பியுடன், சிறுமி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமி மாயமானார். இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கண்ணம்பாளையம் குளம் அருகே தென்னந்தோப்பில் சிறுமி சடலமாக நேற்று மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு 9.30 மணி முதல் தொடர் சூலூர் காவல் நிலையம் முன்பு சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டு சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர். தொடர்ந்து இரவு முழுவதும் சுமார் 8 மணி நேரத்துக்கு மேல் மறியல் போராட்டம் தொடர்ந்தது.
நூற்றுக்கணக்கான மாவட்ட அதிரடிப்படை போலீஸார் சூலூரில் குவிக்கப்பட்டனர். கோவை மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி, டிஐஜி சாமிநாதன், கோவை மாவட்ட எஸ்.பி. பவன்குமார் ரெட்டி மற்றும் சூலூர் எம்.எல்.ஏ.சுகுமார் உள்ளிட்ட பலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இன்று காலை பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கொலை செய்ததாக கூறி, கார்த்தியை அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்தனர். அவருக்கு உதவிய அவரது நண்பர் மோகனும் கைது செய்யப்பட்டார்.
இதில் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற கார்த்தி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதிக்க முயன்றபோது, வலது கால் மற்றும் வலது கை பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து, கார்த்தி கோவை அரசு மருத்துவமனையில் போலீஸார் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மோகன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
காவல் அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில், தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் ஆகியோர் இன்று கோவைக்கு வந்தனர். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையை முடுக்கிவிட்டனர்.
தொடர்ந்து சிறுமியின் சடலம் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் தங்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கிராமத்துக்கு சிறுமியின் சடலத்தை அடக்கம் செய்ய எடுத்து சென்றனர்.
கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது: “சிசிடிவி கேமராக காட்சிகள் மற்றும் தொழில் நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் அருகில் வசித்து வந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்தி (33) 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி படம்: ஜெ.மனோகரன்
சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னை தோட்டத்தில் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதில் அவருக்கு உடந்தையாக அவரது நண்பர் மோகன் (30) இருந்துள்ளார். அவர் மீது குற்றத்தை மறைத்து சதியில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு விரைவில் அரசின் நிவாரண உதவித்தொகையும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும் பெற்றுத் தரப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。