惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
博客园_首页
Google DeepMind News
Google DeepMind News
博客园 - Franky
The GitHub Blog
The GitHub Blog
GbyAI
GbyAI
有赞技术团队
有赞技术团队
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
G
Google Developers Blog
Recent Announcements
Recent Announcements
A
About on SuperTechFans
博客园 - 【当耐特】
博客园 - 三生石上(FineUI控件)
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
美团技术团队
罗磊的独立博客
IT之家
IT之家
博客园 - 聂微东
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
腾讯CDC
P
Proofpoint News Feed
Hugging Face - Blog
Hugging Face - Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை: பிளே ஆஃப் சுற்...
2026-05-17 · via hindutamil

Updated on

2 min read

தரம்சாலா: ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 16 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்தத் தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள ஒரே அணியாக ஆர்சிபி திகழ்கிறது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்யும்.

ஆர்சிபி அணி தனது கடைசி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. அந்த ஆட்டத்தில் சீனியர் நட்சத்திரமான விராட் கோலி 60 பந்துகளில், 105 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். இதனால் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல் திறன் வெளிப்படக்கூடும்.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையயாடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. தொடரின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய அணி அந்த அணி கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து துவண்டுள்ளது. இன்றைய ஆட்டத்திலும் அந்த அணி தோல்வியை சந்தித்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும்.

தரம்சாலா ஆடுகளத்தில் நடப்பு தொடரில் பஞ்சாப் அணி 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் தோல்வி கண்டிருந்தது. இந்த இரு ஆட்டங்களிலும் அந்த அணி 200+ ரன்களை குவித்த போதிலும் இலக்கை பாதுகாக்க முடியாமல் போனது. அதிலும் கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்களை தாரைவார்த்து வெற்றியை தவறவிட்டு இருந்தது.

நடப்பு சீசனில் சேவியர் பார்ட்லெட், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பந்துவீச்சில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக இவர்கள், அதிக ரன்களை வாரிக்கொடுத்துள்ளனர். இதனால் பஞ்சாப் அணி தனது பந்துவீச்சு கூட்டணியை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கடந்த ஆட்டத்தில் அஸ்மதுல்லா ஒமர்சாய் ஆல்ரவுண்டராக சிறந்த திறனை வெளிப்படுத்தியிருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். பந்துவீச்சை பலப்படுத்தும் வகையில் இன்றைய ஆட்டத்தில் விஜயகுமார் வைஷாக் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

பேட்டிங்கை பொறுத்தவரையில் பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கானொலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில போட்டிகளாக இவர்களிடம் இருந்து ஒருங்கிணைந்த செயல் திறன் வெளிப்படவில்லை. இன்றைய போட்டி அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இவர்கள் மட்டையை சுழற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும்.

எனினும் பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசைக்கு ஆர்சிபி அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் அழுத்தம் கொடுக்கக்கூடும்.