





























Updated on
:
1 min read
பழநி: தவெகவினர் கனவில் வேண்டுமானால் அமைச்சரவைப் பட்டியலை தயாரித்துக் கொள்ளலாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
கொடைக்கானலில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கான தேர்தல் இது. முதல்வர் 5 ஆண்டுகள் உழைத்த உழைப்பு, அவரின் திட்டங்களுக்குப் பரிசாக மக்கள் தீர்ப்பு எழுதியுள்ளனர்.
கனவில் வேண்டுமானால் அமைச்சரவை பட்டியலை தவெக தயாரித்துக் கொள்ளலாம். திமுக கூட்டணி 40 சதவீத வாக்குகளைக் கடந்து வெற்றி பெறும். எம்ஜிஆர், என்டிஆ
ரோடு விஜய்யை ஒப்பிட முடியாது. தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அமலாக்கத் துறை, வருமானவரித் துறை உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் பணியாற்றும் துறைகள் தொந்தரவு செய்தன.
என்னுடைய தொகுதியில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனை குறித்து விரைவில் அனைத்து வீடியோ ஆதாரங்களும் வெளியிடப்படும்.
வேட்பாளர்களில் எத்தனை பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டால், மத்திய அரசு யாருக்கு சாதகமாகச் செயல்படுகிறது என்பது தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。