惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
博客园 - Franky
博客园 - 三生石上(FineUI控件)
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
云风的 BLOG
云风的 BLOG
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 【当耐特】
L
LangChain Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
H
Help Net Security
爱范儿
爱范儿
罗磊的独立博客
博客园_首页
美团技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
月光博客
月光博客
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
量子位
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 叶小钗
V
Visual Studio Blog
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
துணிச்சலாக செயல்பட்டதாக பெண் மாஜிஸ்திரேட்டுக்கு உயர் நீதி...
2026-05-10 · via hindutamil

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on

1 min read

மதுரை: மதுரை மாவட்ட நீதி​மன்றத்தின் துணிச்​சலான பெண் மாஜிஸ்திரேட்டுக்கு உயர் நீதி​மன்​றம் பாராட்டு தெரி​வித்​துள்​ளது.

கடந்த ஜனவரி மாதம் மதுரை 5-வது நீதித்​துறை நடு​வர் நீதி​மன்ற நீதிபதி முன் வழக்கு விசா​ரணைக்​காக ஒரு நபர் ஆஜர்​படுத்​தப்​பட்​டார். அப்​போது மதுரை வழக்​கறிஞர் சங்க நிர்​வாகி​கள் மற்​றும் சில வழக்​கறிஞர்​கள் சேர்ந்து நீதி​மன்ற நடவடிக்​கைகளுக்கு இடையூறு செய்​தனர் என்​றும், இந்​தச் சம்​பவத்​தில் வழக்​கறிஞர்​கள் ஒரு​மை​யில் பேசி நீதி​மன்​றத்​தின் மாண்​பைக் குலைக்​கும் வகை​யில் நடந்​து​கொண்​ட​தாக தெரிகிறது. இதுகுறித்து நீதிபதி தனது அறிக்​கை​யில் குறிப்​பிட்​டுள்​ளார்.

இதனால் நீதி​மன்​றப் பணி​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டு, நீதிபதி தனது இருக்​கையி​லிருந்து எழுந்து செல்​லும் நிலை ஏற்​பட்​டது. இதையடுத்​து, சம்​பந்​தப்​பட்ட வழக்​கறிஞர்​கள் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்​கான நோட்​டீஸை அந்த நீதிபதி பிறப்​பித்​தார். இதை எதிர்த்து வழக்​கறிஞர்​கள் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுதாக்​கல் செய்​தனர். இந்த மனு நீதிபதி விக்​டோரியா கெளரி முன் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர், தங்​கள் மீதான குற்​றச்​சாட்​டு​கள் ஆதா​ரமற்​றவை என்றும் இந்த விவ​காரத்தை சுமுக​மாகப் பேசித் தீர்க்​கத் தயா​ராக இருப்​ப​தாக​வும் தெரி​வித்​தனர்.

இதையடுத்து நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வு: இந்த வழக்கை பொறுத்​தவரை, கண்​ணி​யத்​தை​யும் அதி​காரத்​தை​யும் நிலைநிறுத்த, வழக்​கறிஞர்​களின் அனுபவம் அல்​லது பதவியைக் கண்டு அஞ்​சாமல், சட்​டத்​தின் மாண்​பைக் காக்க துணிச்​சலுடன் செயல்​பட்ட இளம் நீதிப​தி​யான லட்​சுமி பிரி​யா​வின் மனஉறு​தியை இந்த நீதி​மன்​றம் பாராட்​டு​கிறது.

வழக்​கறிஞர்​கள் நீதி​மன்ற அதி​காரத்தை மீறி அழுத்​தம் கொடுக்க முயன்​றால், அதை ஏற்க முடி​யாது. மாவட்ட நீதித்​துறை நீதி வழங்​கல் அமைப்​பின்முது​கெலும்​பாகும். சாதாரண குடிமகன் முதலில் அணுகு​வது இந்த நீதி​மன்​றங்​களைத் தான். எனவே, நீதி​மன்​றத்​தின் கண்​ணி​யத்​தை​யும் கவுர​வத்​தை​யும் பேணுவது வழக்​கறிஞர்​களின் கடமை.

நீதி​மன்​றத்​தில் நடந்த சம்​பவம் குறித்து சிசிடிவி காட்​சிகள் போன்ற முதற்​கட்ட ஆதா​ரங்​கள் உள்ள நிலை​யில், இந்த கட்​டத்​தில் வழக்கை ரத்து செய்ய முடி​யாது எனக்​கூறி அனைத்து மனுக்​களை​யும் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார்.