惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
G
Google Developers Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
GbyAI
GbyAI
L
LangChain Blog
云风的 BLOG
云风的 BLOG
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
aimingoo的专栏
aimingoo的专栏
P
Proofpoint News Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
小众软件
小众软件
WordPress大学
WordPress大学
A
About on SuperTechFans
大猫的无限游戏
大猫的无限游戏
C
Check Point Blog
月光博客
月光博客
Stack Overflow Blog
Stack Overflow Blog
美团技术团队
Jina AI
Jina AI
T
Tailwind CSS Blog
Google DeepMind News
Google DeepMind News
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
குற்றாலம் பிரதான அருவியில் குளிப்பதற்காக பழமையான சிலைகளை ...
2026-05-08 · via hindutamil

Updated on

1 min read

மதுரை: குற்​றாலம் பிரதான அரு​வி​யில் குளிப்​ப​தற்​காக அங்​குள்ள பழமை​யான சிலைகளை சேதப்​படுத்​து​வதை அனும​திக்க முடி​யாது என, உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் தெரி​வித்​தனர்.

மதுரை எழு​மலை​யைச் சேர்ந்த ராமர் ரவிக்​கு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: குற்​றால அருவி​கள் வரலாற்று சிறப்​புமிக்​கவை. அருவி​களில் பழமை​யான சிலைகள் உள்​ளன. தற்​போது, குற்​றால அரு​விப் பகு​தி​களில் சீரமைப்​புப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​தப் பணி​யின்​ போது, அங்​குள்ள கற்​சிலைகள் பொதுப்​பணித் துறை​யால் சேதப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. விநாயகர் உட்பட பல்​வேறு சிலைகள் அங்​கிருந்து அகற்​றப்​பட்​டுள்​ளன.

இந்த செயல்​பாடு மத நம்​பிக்​கையை புண்​புடுத்​தும் வகை​யில் அமைந்​துள்​ளது. எனவே, குற்​றாலம் பிர​தான அருவி பகு​தி​யில் உள்ள சிலைகளை சீரமைத்​தல் என்ற பெயரில் அகற்​றவோ, மாற்​றவோ கூடாது என்​றும், பழங்​கால சிலைகளை சேதப்​படுத்​தி​ய​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரப்​பட்​டிருந்​தது.

இந்த மனு நீதிப​தி​கள் வேல்​முரு​கன், குமரப்​பன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அரசு தரப்​பில், குற்​றாலம் பிரதான அரு​வி​யில் நடை​பாதை விரிவுப்​படுத்​தும் பணி நடந்து வரு​கிறது. இதற்கு அப்​பகு​தி​யில் உள்ள 2 கற்​சிலைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளன. பணி​கள் முடிந்​ததும் அந்த சிலைகள் அதே இடத்​தில் நிறுவப்​படும்.

குற்​றாலத்​தில் இன்​னும் 10 நாட்​களில் சீசன் தொடங்​க​வுள்​ளது. சீசன் தொடங்​கி​னால் குற்​றலாத்​துக்கு பயணி​கள் அதி​கள​வில் வரு​வர். இதனால், சீரமைப்​புப் பணி​களை விரை​வில் முடிக்க வேண்​டும். அதற்​கு, நீதி​மன்​றம் அனு​மதி வழங்க வேண்​டும் என கேட்டு கொள்​ளப்​பட்டது.

அதற்கு நீதிப​தி​கள், குளிப்​ப​தற்​காக 2 ஆயிரம் ஆண்டு பழமை​யான சின்​னங்​களை சேதப்​படுத்​து​வதை அனு​ம​திக்க முடி​யாது. அப்​படி குளிப்​ப​தாக இருந்​தால் குளியல் அறை​யில் போய் குளிக்​கலாம். சீரமைப்​புப் பணியை தொடரக்​கூ​டாது. ஜூன் முதல் வாரம் வரை தற்​போதைய நிலை தொடர வேண்​டும் என உத்​தர​விட்​டனர்.