惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
博客园 - Franky
T
Tailwind CSS Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
雷峰网
雷峰网
Hugging Face - Blog
Hugging Face - Blog
有赞技术团队
有赞技术团队
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
阮一峰的网络日志
阮一峰的网络日志
C
Check Point Blog
爱范儿
爱范儿
T
The Blog of Author Tim Ferriss
aimingoo的专栏
aimingoo的专栏
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 聂微东
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
L
LangChain Blog
云风的 BLOG
云风的 BLOG
MyScale Blog
MyScale Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
The Cloudflare Blog
博客园 - 三生石上(FineUI控件)

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தீவிரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: பஹல்காம் தாக்குதல் ந...
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: எந்த வடிவி​லான தீவிர​வாதத்​துக்​கும் இந்​தியா அடிபணி​யாது என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். கடந்த ஆண்டு ஏப்​ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் தீவிர​வா​தி​கள் தாக்குதல் நடத்திய​தில் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழு​வதும் பெரும் கொந்​தளிப்பை ஏற்படுத்தியது.

இந்​தத் தாக்​குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இந்த தாக்​குதலில் உயி​ரிழந்​தவர்​களுக்கு மரியாதை செலுத்​திய பிரதமர் நரேந்​திர மோடி எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஆண்டு இதே நாளில் பஹல்​காமில் நடந்த கொடூர​மான தீவிர​வாதத் தாக்​குதலில் உயி​ரிழந்த அப்​பாவி மக்​களை நினைவு கூர்​கிறேன். அவர்​கள் என்​றும் மறக்​கப்பட மாட்​டார்​கள்.

இந்த இழப்​பைத் தாங்​கிக் கொள்​ளும் பாதிக்​கப்​பட்ட குடும்பத்தினருடன் எனது எண்​ணங்​கள் எப்​போதும் இருக்​கும். ஒரு தேச​மாக, நாம் துக்​கத்​தி​லும் உறு​தி​யிலும் ஒன்​றிணைந்து நிற்கிறோம். எந்த வடிவத்​திலான தீவிர​வாதத்​துக்​கும் இந்​தியா ஒரு​போதும் அடிபணி​யாது. தீவிர​வா​தி​களின் கொடூர​மான திட்டங்​கள் ஒரு​போதும் வெற்றி பெறாது. இவ்​வாறு அவர் கூறியுள்ளார்.

இந்​திய ராணுவ​மும் ஒரு கடுமை​யான எச்​சரிக்​கை​யுடன் இந்த நாளை நினைவு கூர்ந்​தது. ராணுவத்​தின் எக்ஸ் தள பதி​வில், “இந்தி​யா​வுக்கு எதி​ரான செயல்​களுக்​கான பதிலடி உறுதி செய்யப்​பட்​டுள்​ளது. நீதி வழங்​கப்​படும். எப்​போதும்” என்று குறிப்பிடப்​பட்​டுள்​ளது.

‘ஆபரேஷன் மகாதேவ்' குறித்த ஒரு வரைபடத்​தைப் பகிர்ந்​துள்ள ராணுவம், “இது ஒரு காலத்​தின் விஷ​யம் மட்​டுமே. 300 சதுர கி.மீ பரப்​பளவி​லான கடின​மான நிலப்​பரப்​பில், 93 பகல் மற்​றும் இரவுகள் இடை​வி​டாது தேடு​தல் வேட்டை நடத்​தி, 3 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர். ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​கிறது” என்று பதிவிட்​டுள்​ளது.

பஹல்​காம் தாக்​குதலுக்கு பதிலடி​யாக, இந்​திய ராணுவம் கடந்த ஆண்டு மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யைத் தொடங்​கியது. எல்​லை​யைத் தாண்​டி​யுள்ள (பாகிஸ்​தான்) தீவிரவாதக் கட்​டமைப்​பு​களைக் குறி​வைத்து நடத்​தப்​பட்ட இந்​தத் தாக்குதலில், லஷ்கர்​-இ-தொய்​பா, ஜெய்​ஷ் மற்​றும் ஹிஸ்​புல் முஜாகிதீன் அமைப்​பு​களு​டன் தொடர்​புடைய 9 முக்​கிய ஏவுதளங்கள் அழிக்​கப்​பட்​டன. இதில் 100-க்​கும் மேற்​பட்ட தீவிரவாதி​கள் கொல்​லப்​பட்​டனர்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்​தான் நடத்​திய பதில் தாக்​குதலால் 4 நாட்​கள் சிறிய அளவில் போர் மூண்​டது. பின்​னர் இஸ்லாமாபாத்தின் கோரிக்​கையை ஏற்று மே 10ம் தேதி போர் ​நிறுத்​தம் எட்​டப்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக, பாது​காப்​புப் படையினர் ‘ஆபரேஷன் மகாதேவ்' மூலம் பஹல்​காம் படுகொலை​யில் நேரடி​யாகத்​ தொடர்​புடைய 3 தீவிர​வா​தி​களைக்​ கண்​டறிந்​து சுட்​டுக்​ கொன்​றனர்​.