























Updated on
:
1 min read
நான் நிம்மதியாக சாப்பிடுவது ஆர்.பி.சவுத்ரி போட்ட பிச்சை என்று இயக்குநர் விக்ரமன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணமடைந்தார். அவருடைய மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களையும் தயாரித்து வெற்றி கண்டவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.பி.சவுத்ரி மறைவு குறித்து இயக்குநர் விக்ரமன் கண்ணீருடன் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “40 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநராக வேண்டும் என்ற கனவுகளோடு சென்னைக்கு வந்து ரொம்ப கஷ்டப்பட்டேன். உதவி இயக்குநராக பணிபுரிந்து இயக்குநராக வேண்டும் என்று பல தயாரிப்பு நிறுவனங்கள் ஏறி இறங்கியிருக்கிறேன். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஆர்.பி.சவுத்ரி சாரிடம் போய் ஒரு கதை சொன்னேன்.
அவரும் உடனே ஒகே சொல்லி ஆரம்பித்த படம் தான் ‘புது வசந்தம்’. இன்று என் வீட்டுக்கு பெயரே ‘புது வசந்தம்’ தான். இன்று நான் நிம்மதியாக சாப்பிடுகிறேன் என்றால், அது அவர் போட்ட பிச்சை. இன்று அவர் இல்லை. எனக்கு மிகவும் கவலையான விஷயம் என்னவென்றால், 100 படம் எடுக்கவேண்டும் என கனவு கண்டார். சூப்பர் குட் நிறுவனத்தில் 100 படம் எடுப்பார்கள், ஆனால் அதை பார்ப்பதற்கு அவர் இல்லை என்பது வேதனையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்ரமன்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。