






















Updated on:
கலிபோர்னியா: யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் கால் இறுதிக்கு இந்திய வீரர் ரவுனக் சவுகான் தகுதி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய வீரர் ரவுனக் 21-17, 26-24 என்ற செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவரும், போட்டித் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான சீன தைபேயின் சவ் டியன் சென்னை வீழ்த்தினார்.
இதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு இந்திய வீராங்கனைகள் தான்வி சர்மா, ரக்சிதா ஸ்ரீ, தேவிகா சிஹாக் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தான்வி சர்மா21-12, 21-19 என்ற கணக்கில் சீன தைபேயின் டுங் சியோவ் டாங்கையும், ரக்சிதா ஸ்ரீ 21-4, 21-19 என்ற கணக்கில் சீன தைபேயின் சென் சு யூவையும், தேவிகா சிஹாக் 21-17, 21-19 என்ற கணக்கில் தாய்லாந்தின் டான்ருக் சீஹெங்கையும் வீழ்த்தினர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என்ற கணக் கில் மலேசிய வீரர் லீ ஜி ஜியாவை வென்றார்
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。