




















சென்னை: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பிக்க வேண்டும்.
அதன் விவரம்:
1. ஆதார் அட்டை
2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி அடையாள அட்டை
3. புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள்
4. ஆயுஷ்மான் பாரத் அல்லது தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை
5. ஓட்டுநர் உரிமம்
6. வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டை
7. தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறன் அட்டை
8. இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
10. மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை
11. மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை
12. எம்.பி., எம்எல்ஏ அடையாள அட்டை.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。