



























Updated on
:
1 min read
சென்னை: தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித் துறையும், ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப் பணித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முதல்வர் விஜய்யின் வசம் பொது நிர்வாகம், உள்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், காவல் உள்ளிட்ட துறைகள் உள்ளன.
அமைச்சர் செங்கோட்டையனுக்கு மிக முக்கியமான நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்துக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அருண் ராஜுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் வெங்கட் ரமணனுக்கு உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நிர்மல் குமாருக்கு மின்சாரம் மற்றும் சட்டத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டி.கே.பிரபுவுக்கு சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。