惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
量子位
人人都是产品经理
人人都是产品经理
小众软件
小众软件
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - Franky
Recent Announcements
Recent Announcements
A
About on SuperTechFans
Microsoft Security Blog
Microsoft Security Blog
N
Netflix TechBlog - Medium
H
Help Net Security
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MyScale Blog
MyScale Blog
The Cloudflare Blog
S
SegmentFault 最新的问题
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
J
Java Code Geeks
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
P
Proofpoint News Feed
宝玉的分享
宝玉的分享
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தடம் மாறிய அரசியலும் தனிக்கட்சி தொடங்கிய தலைவர்களும்!
ஆர்.ஷபிமுன்னா · 2026-06-08 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: ஆர்​எஸ்​எஸ் எனும் தாய் அமைப்​பின் அரசி​யல் பிரிவாக உரு​வானது​ தான் ஜன சங்​கம். பிறகு 1977-ல் இது பாஜகவாகி தற்​போது, 3-வது முறை மத்​திய கூட்​டணி ஆட்​சிக்​குத் தலைமை வகிக்​கிறது.

நாட்​டில் பெரிய மாநில​மான உ.பி. உட்பட 21 மாநிலங்​களி​லும் பாஜக​வும் அதன் கூட்​ட​ணி​யும் ஆட்​சி​யில் உள்​ளன. பழம்​பெரும் கட்சி காங்​கிரஸின் பல்​வேறு சாதனை​களை முறியடித்து தற்​போது நாட்​டில் மிகப்​பெரிய கட்​சி​யாக வளர்ந்​துள்​ளது பாஜக. ஆனால், தென் மாநிலங்​களில் கர்​நாட​கா​வைத் தவிர வேறு எங்கும் பாஜக​வால் ஆட்சி அமைக்க முடிய​வில்​லை. பிராந்​தி​யக் கட்​சிகள்​ தான் அதற்கு காரணம். இந்​தச் சூழலில், பாஜக முன்னாள் மாநிலத் தலை​வர் கே.அண்​ணா​மலை கட்​சி​யில் இருந்து வெளி​யேறி உள்​ளார்.

பல காரணங்​கள் ஊடகங்​களில் விவா​திக்​கப்​படு​கின்​றன. ஆனால், அண்​ணா​மலைக்கு முன்பே குஜ​ராத்​தில் கேசு​பாய் பட்டேல், சங்​கர் சிங் வகேலா, ம.பி.​யில் உமா பார​தி, உ.பி.​யில் கல்யாண் சிங், ஜார்​க்கண்​டில் யஷ்வந்த் சின்​ஹா, கர்​நாட​கா​வில் எடியூரப்பா போன்​றோர் பாஜக​வில் இருந்து விலகி தனி கட்சி தொடங்கி உள்​ளனர். இவர்​களில் சின்​ஹா​வைத் தவிர மற்ற அனை​வருமே பாஜக சார்​பில் முதல்​வ​ராகப் பதவி வகித்​தவர்​கள்.

கடந்த 1995, 1998 என இரு​முறை குஜ​ராத்​தின் பாஜக முதல்​வ​ராக இருந்​தவர் ஜன சங்​கின் தொடக்​கக் கால உறுப்​பின​ராக இருந்தவர் கேசு​பாய். இவர் 2012-ல் பாஜக​வில் இருந்து வெளி​யேறி, ‘குஜராத் பரிவர்​தன் பார்ட்​டி’ என்ற கட்​சி​யைத் தொடங்​கி​னார். அதே ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிட்​ட​வருக்கு வெறும் 2 தொகு​தி​கள் மட்​டுமே கிடைத்​தது. பின்​னர் உடல்​நலம் குன்றியவர், அடுத்த 2 ஆண்​டு​களில் எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்து பாஜக​வுக்கே திரும்​பி​னார். பாஜக மாநிலங்​களவை எம்.பி.யாக​வும் இருந்​தவர், கரோ​னா​வால் பாதிக்​கப்​பட்டு 2020-ல் மறைந்தார்.

குஜ​ராத்​தில் சங்​கர் சிங் வகேலா​வும் பாஜக​வில் இருந்து 1996-ல் வெளி​யேறி​னார். அதே ஆண்டு ‘ராஷ்டிரிய ஜனதா பார்ட்​டி’ தொடங்​கி, காங்​கிரஸ் ஆதர​வுடன் குஜ​ராத் முதல்​வ​ரா​னார். ஓராண்டு மட்​டும் பதவி​யில் இருந்​து​விட்டு பின்​னர் கட்​சி​யைக் காங்​கிரஸுடன் இணைத்​து​விட்​டார். காங்​கிரஸில் இருந்து 2017-ல் வெளி​யேறி, தனிக்​கட்​சி​யில் போட்​டி​யிட்​ட​வ​ரால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடிய​வில்​லை. அதன்​பிறகு தேசி​ய​வாதக் காங்​கிரஸ் கட்​சி​யில் ஐக்​கிய​மானவர், அங்​கிருந்​தும் வெளி​யேறி 2022-ல் 3-வது முறை​யாக புதிய கட்சி தொடங்​கி​னார். அப்​போது சங்​கர் சிங்​கால் எம்​எல்​ஏ​வாக கூட முடிய​வில்​லை.

ம.பி. பாஜக​வின் தீவிர இந்​துத்​துவா தலை​வ​ராக அறியப்​பட்​ட​வர் பெண் துறவி உமா பார​தி. பாஜக.​வின் பிரச்​சார பீரங்கி என்று பெயர் பெற்​றவர். ம.பி.​யில் முதல் முறை​யாக 2003-ல் பாஜக ஆட்சியின் முதல்​வ​ரா​னார். ஹூப்ளி மதக்​கலவர வழக்​கில் கைது செய்​யப்​பட்டு ஒரே ஆண்​டில் முதல்​வர் பதவியை இழந்​தார். கடந்த 2004-ல் பாஜக​வில் இருந்து நீக்​கப்​பட்​ட​தால், தனிக்​கட்சி தொடங்கி சாதிக்க முடி​யாமல் போனார். மீண்​டும் 2011-ல் பாஜகவில் சேர்க்​கப்​பட்டு உ.பி. அரசி​யலில் களம் இறக்கப்பட்டார். மத்​திய அமைச்​ச​ராக​வும் இருந்​தவர் தற்​போது ஓய்வு பெறும் நிலை​யில் உள்​ளார்.

உ.பி.​யில் தன் பள்​ளிப்​ பரு​வம் முதல் ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் தீவிர உறுப்​பின​ராக இருந்​தவர் கல்​யாண் சிங். கடந்த 1991-ல் பாஜக முதல்​முறை பாஜக ஆட்சி அமைத்த போது முதல்வரானவர். அயோத்தி பாபர் மசூதி இடிக்க முக்​கியக் காரணமா​னார். இதனால் உ.பி. அரசு கலைக்​கப்​பட்டு பதவி இழந்தவர். கடந்த 1997-ல் மீண்​டும் முதல்​வ​ரா​னார். கடந்த 1999-ல் பாஜக​வால் பதவி இறக்​கப்​பட்​ட​வர், புதிய கட்சி தொடங்​கி​னார். மீண்​டும் 2004-ல் பாஜக​வுக்கு வந்து மக்​களவை எம்​.பி.​யாகி 2009ல் வெளி​யேறி​னார். கடந்த 2014-ல் பாஜக​வுக்கு திரும்​பிய​வர் ராஜஸ்தான் ஆளுநர் பதவிக் காலம் முடித்து 2021-ல் கால​மா​னார்.

கர்​நாட​கா​வில் இளம் பரு​வம் முதல் ஆர்​எஸ்​எஸ் தொண்​ட​ராக இருந்​தவர் பி.எஸ்​.எடியூரப்​பா. ஜன சங்​கிலும் தொடர்ந்​தவர் பாஜக முதல் முறை ஆட்சி அமைத்த போது 2008-ல் முதல்​வ​ராகப் பதவி ஏற்​றார். தன்னை அவமானப்​படுத்​தி​ய​தாக கூறி 2012-ல் பாஜகவில் இருந்து வெளி​யேறி, கர்​நாடகா ஜனதா கட்​சி​யைத் தொடங்​கி​னார். 2014-ல் திரும்​பிய​வர் 2018-ல் மீண்​டும் பாஜக முதல்​வ​ராகும் வாய்ப்பு கிடைத்​தும் மெஜாரிட்டி நிரூபிக்க முடியாமல் ராஜி​னாமா செய்​தார். அதன்​பிறகு 2019-ல் கர்​நாடக முதல்​வ​ரானவர் 2021 வரை மட்​டுமே நீடிக்க முடிந்​தது.

இவர்​கள் அனை​வருமே தனிக் கட்சி தொடங்கி பின்​னர் பாஜகவிலேயே ஐக்​கிய​மானவர்​கள். ஆனால், அண்​ணா​மலை​யின் வெளி​யேற்​றம் வித்​தி​யாச​மானது. இவர் பாஜக ஆதர​வுடன் வெளியேறி உள்​ளார். அண்​ணா​மலை​யின் ‘வி த லீடர்​ஸ்’ இயக்​கம் அரசி​யல் கட்​சி​யாகி அடுத்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் போட்டியிடு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் அவர் தவெக விஜய்​யைப் போல் அடுத்த முதல்​வ​ராகி விடு​வார் என்று உறுதியாகக் கூற முடி​யாது. இதனால், அண்​ணா​மலைக்​கும் இதர மாநிலத் தலை​வர்​களைப் போல், பாஜக​வுக்​குத் திரும்​புவதைத் தவிர வேறு வழி​யில்​லை.

ஒரு​வேளை தன் புதிய கட்சி சார்​பில் தேர்​தலில் போட்​டி​யிட்​டாலும் அவரால் பாஜக தொடர்​பைத் துண்​டிக்க முடி​யாது எனத் தெரிகிறது. தமிழ்​நாடு பாஜக தலை​வர் உள்​ளிட்​டோர் இதை மறுத்தா​லும் பொது​மக்​கள் நம்​பிய​தாகத் தெரிய​வில்​லை. எனவே, அண்​ணா​மலை​யும் ஒரு கட்​டத்​தில் பாஜக​வுக்கு திரும்​பு​வார் என்றே எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இது உண்மை இல்லை எனில் அண்​ணா​மலை பாஜக​வுக்​கு எதி​ராக கடுமை​யாக விமர்​சிக்​க வேண்​டி இருக்​கும்​. இதை வரும்​ நாட்​களில்​ அண்​ணா​மலை செய்​வா​ரா என்​ப​தை பொறுத்​து இருந்​து பார்​க்​க வேண்​டி உள்​ளது.