惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
Vercel News
Vercel News
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
MyScale Blog
MyScale Blog
P
Proofpoint News Feed
量子位
Engineering at Meta
Engineering at Meta
B
Blog RSS Feed
博客园 - 【当耐特】
Recent Announcements
Recent Announcements
Google DeepMind News
Google DeepMind News
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 聂微东
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
人人都是产品经理
人人都是产品经理
IT之家
IT之家
T
The Blog of Author Tim Ferriss
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Jina AI
Jina AI
博客园 - 三生石上(FineUI控件)

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி ...
2026-05-20 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: பணமோசடி வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜியை விசா​ரிக்க அனு​மதி அளிக்​கக் கோரி தமிழக அரசுக்கு அமலாக்​கத் துறை கடிதம் எழுதி உள்ளது.

கடந்த 2011 முதல் 2016 வரையி​லான அதி​முக ஆட்​சி​யில், போக்​கு​வரத்து துறை அமைச்​ச​ராக இருந்த செந்​தில் பாலாஜி, போக்​கு​வரத்து துறை​யில் வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது‌.

இந்த விவ​காரம் தொடர்​பாக செந்​தில் பாலாஜி, அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் உள்​ளிட்​டோர் மீது பண மோசடி குற்​றச்​சாட்​டின் பேரில் அமலாக்​கத் துறை வழக்​குப் பதிவு செய்​தது. அவர்​கள் மீது வழக்கு தொடர மாநில அரசு அனு​மதி அளிக்​காத​தால் நீதி​மன்ற விசா​ரணை இன்​னும் தொடங்​காமல் உள்​ளது.

இந்​நிலை​யில்​தான், போக்​கு​வரத்து துறை​யில் வேலை வாங்​கித் தரு​வ​தாக பணம் பெற்​ற​தாகக் கூறப்​படும் பணமோசடி வழக்​கில், முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மற்​றும் சிலருக்கு எதி​ராக சட்​டப்​பூர்வ நடவடிக்கை எடுக்க அனு​மதிகோரி தமிழக தலை​மைச் செய​லா​ளர் சாய் குமாருக்கு அமலாக்​கத் துறை கடிதம் எழு​தி​யுள்ளது.

திமுக அரசு அனுமதி மறுப்பு முன்​ன​தாக, கடந்த 7 மாதங்​களுக்கு முன்பு இதே வழக்​கில் செந்​தில் பாலாஜியை விசா​ரணை நடத்த அப்​போதைய திமுக அரசு அனு​மதி மறுத்​திருந்த நிலை​யில், தற்​போது அமலாக்​கத் துறை மீண்​டும் அனு​மதி கோரி கடிதம் எழு​தி​யுள்​ளது.

கடந்த 15-ம் தேதி அமலாக்​கத் துறை அனுப்​பி​யுள்ள 3 பக்​கங்​கள் கொண்ட கடிதத்​தில் கடந்​தாண்டு அப்​போதைய ஆளுநருக்கு அமலாக்​கத் துறை சார்​பில் அனு​மதி கோரி கடிதம் அனுப்​பப்​பட்​டது.

மாநில அரசின் அறி​வுறுத்​தலின்​படி, அக்​கடிதம் திருப்பி அனுப்​பப்​பட்​டது. அக்.2025-ல் அப்​போதைய தலைமைச் செய​லா​ளர் ஆளுநருக்கு எழு​திய கடிதத்​தில், அரசு ஊழியரை விசா​ரிக்க மாநில அரசே தகுதி​யான அதி​காரம் கொண்டது.

எனவே, அமலாக்​கத்துறை ஆளுநரை அணுகு​வதற்​குப் பதிலாக நேரடி​யாக தலை​மைச் செய​லா​ள​ருக்​குத்​தான் கடிதம் எழு​தி​யிருக்க வேண்​டும் என்று குறிப்​பிட்​டிருந்​தார்.

அதன் அடிப்​படை​யில் தற்​போது அமலாக்​கத் துறை தகுந்த ஆதா​ரங்​கள், ரகசிய விசா​ரணை குறிப்​பு​களு​டன் தலை​மைச் செய​லா​ள​ருக்கு புதிய கடிதத்தை அனுப்பி உள்​ளது.

தற்​போது ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் தலை​மையி​லான ஆட்சி தமிழகத்​தில் நடை​பெறு​வ​தால் அவர் என்ன முடிவு எடுக்​கப்​போகிறார் என்​பதை பொறுத்தே இந்த பணமோசடி வழக்​கின் போக்கு செல்​லும் என அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த பணமோசடி வழக்​கில் 2023 ஜூன் 14-ம் தேதி செந்​தில் பாலாஜி அமலாக்​கத் துறை​யால் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர், 471 நாள் சிறை​வாசத்​துக்கு பிறகு செப்​டம்​பர் 2024-ல் உச்ச நீதி​மன்​றம் அவருக்கு நிபந்​தனை ஜாமீன் வழங்​கியது.

இதனைத் தொடர்ந்து அமலாக்​கத்​துறை சென்னை சிறப்பு நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரி​கை​யைத் தாக்​கல் செய்​திருந்​தா​லும், குற்​றம் நடந்​த​தாகக் கூறப்​படும் கால​கட்​டத்தில் அவர் அமைச்​ச​ராக இருந்​த​தால், மாநில அரசின் வி​சா​ரணை அனு​மதி இன்​னும் கிடைக்​கப் பெற​வில்​லை. இதனால் நீதி​மன்​ற வி​சா​ரணை இன்​னும்​ தொடங்​கப்​ப​டா​மல் நிலுவையில் உள்ளது.