

























தோண்டி எடுக்கப்பட்ட 7 சடலங்கள்:
வழக்கின் தீவிரத்தை உணர்ந்த போலீஸார், ராய்ப்பூர் மருத்துவ சட்ட நிறுவனத்தின் உதவியுடன், ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்ட 7 பேரின் சடலங்களை மீண்டும் தோண்டி எடுத்து உடற்கூராய்வுக்கு அனுப்பினர்.
புத்ராம் ஜெய்ஸ்வாலின் உடல் ஏற்கெனவே எரிக்கப்பட்டு விட்டதால், மற்ற உடல்களின் டிஎன்ஏ மற்றும் உடல் உள்ளுறுப்புகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அதில் விஷம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீஸாரின் விசாரணையில் மாட்டிய ராம் சகாய், தனது கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தன்னிடம் இலவசமாக மது கேட்டு மிரட்டியது, தேர்தல் முன்விரோதம், பொது இடத்தில் அவமானப் படுத்தியது, நிலத் தகராறு, செய்வினை செய்ததாக எழுந்த சந்தேகம் என மிகவும் அற்பமான காரணங்களுக்காக இந்த 8 கொலைகளையும் செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். குறிப்பாக, மகேத்ரு ராம் என்பவரிடம் வாங்கிய ரூ.50,000 கடனைத் திருப்பித் தரக் கூடாது என்பதற்காகவே அவருக்கும் மதுவில் விஷம் வைத்துக் கொன்றுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。