惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
aimingoo的专栏
aimingoo的专栏
Martin Fowler
Martin Fowler
C
Check Point Blog
G
Google Developers Blog
V
Visual Studio Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Google DeepMind News
Google DeepMind News
人人都是产品经理
人人都是产品经理
有赞技术团队
有赞技术团队
MongoDB | Blog
MongoDB | Blog
月光博客
月光博客
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
大猫的无限游戏
大猫的无限游戏
D
Docker
Hugging Face - Blog
Hugging Face - Blog
The GitHub Blog
The GitHub Blog
博客园 - 三生石上(FineUI控件)
A
About on SuperTechFans
Recent Announcements
Recent Announcements
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
阮一峰的网络日志
阮一峰的网络日志
Stack Overflow Blog
Stack Overflow Blog
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உ.பி. தீ விபத்தில் கருகி உயிரிழந்த திருமண ஜோடி - நிச்சயம்...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

உயிரிழந்த நீலேஷ்குமார், அனாமிகா சமந்த்

Updated on: 

லக்னோ: உத்தர பிரதேச தீ விபத்​தில் திரு​மணம் நிச்சயிக்கப்பட்டு ஒரு வார​மான நிலை​யில் ஜோடி ஒன்று கருகி உயி​ரிழந்த சோகம் தற்​போது தெரிய​வந்​துள்​ளது.

உத்தர பிரதேசம் லக்னோ அரு​கே​ அலிகஞ்ச் பகு​தியில் உள்ள வணிக வளாகத்​தின் முதல் தளத்​தில் அனிமேஷன் பயிற்சி மையம் செயல்​பட்​டுள்​ளது. 15 முதல் 17 வயதுக்கு உட்​பட்ட பல மாணவர்​கள் இங்கு பயிற்சி பெற்று வந்​தனர்.

இந்​நிலை​யில் வணிக வளாகத்​தில் உள்ள 3-வது தளத்​தில் நேற்று முன்​தினம் மாலை திடீரென தீப்​பற்​றியது. இது மளமளவென பரவி அடுத்​தடுத்த தளங்​களுக்கு பரவியது. இதில் முதல் தளத்​தில் அனிமேஷன் பயிற்சி மையத்​தில் இருந்த மாணவர்​கள் சிக்​கினர். இந்த மையத்​தில் ஏற்​பட்ட தீ, அரு​கில் உள்ள அடுக்​கு​மாடி குடியிருப்​புக்​கும் வேக​மாக பரவியது. இந்த விபத்​தில் 15 பேர் உயிரிழந்​தனர்.

இந்​நிலை​யில் இந்த தீவிபத்​தில் உயி​ரிழந்த 15 பேரில் திரு​மணம் நிச்​சய​மான ஜோடி ஒன்று இருந்​தது தற்​போது தெரிய​வந்​துள்​ளது. இந்த மையத்​தில் பணி​யாற்றி வந்த நீலேஷ் குமார், அவருக்​காக நிச்​ச​யிக்​கப்​பட்​டிருந்த அனாமிகா சமந்த் ஆகியோ​ரும் உயிரிழந்த 15 பேரில் அடக்​கம். நீலேஷ்கு​மார் உத்​தர பிரதேசத்தைச் சேர்ந்​தவர். அவரது காதலி அனாமிகா சமந்த். இவரும் இந்த பயிற்சி மையத்​திலேயே வேலை செய்து வந்​தார். இவர் மேற்கு வங்​கத்​தைச் சேர்ந்​தவர்.

இவர்​களது காதல் விவ​காரம் இரு வீட்​டாருக்​கும் தெரிய​ வந்து திருமணத்​துக்கு சம்​ம​தித்​தனர். இந்​நிலை​யில் கடந்த வாரம்​ தான் அனாமி​கா​வின் வீட்​டார், மேற்கு வங்​கத்​திலிருந்து உ.பி.க்கு வந்து மணமகன் வீட்​டாரிடம் திரு​மணப் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது இரு​வருக்​கும் திரு​மணம் செய்ய இரு வீட்​டாரும் முடிவு செய்து நிச்​சய​மும் செய்​தனர். இந்​நிலை​யில்​ தான் இந்த தீ விபத்து நடந்து இரு​வரது உயிரும் பறி​போய் ​விட்​டது. திருமண ஏற்பாடு​கள் தொடங்​கிய வீட்​டில் தற்​போது ஈமச் சடங்குகளுக்கான ஏற்​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இது குறித்து நீலேஷ்கு​மாரின் சகோ​தரர் அபிஷேக் கூறும்​போது, “திருமண நிச்​ச​யத்​துக்​காக கடந்த வாரம் சிறிய அளவில் நிகழ்ச்சியை எங்​கள் வீட்​டில் ஏற்​பாடு செய்​தோம். அனாமி​காவை எல்​லோருக்​கும் பிடித்​து​விட்​டது. அவர் ஒரு கள்​ளம், கபட​மில்​லாத பெண். எப்​போதும் சிரித்​துக் கொண்டே மகிழ்ச்​சி​யாக இருப்​பார். இரு​வரை​யும் இழந்​ததை எங்​களால் தாங்​கிக் கொள்ள முடியவில்லை.

அடுத்த வாரம் மேற்கு வங்​கத்​துக்​குச் சென்று அவர்​கள் வீட்​டினரைப் பார்த்​து​விட்டு வரலாம் என்று நினைத்​திருந்​தோம். ரயில் டிக்​கெட்​டும் முன்​ப​திவு செய்​து​விட்​டோம். ஆனால் எல்​லாம் தலைகீழாகப் போய்​விட்​டது. நிச்​ச​யம் முடிந்து ஒரு வார​மான நிலை​யில் இந்த சம்​பவம் நடந்​து​விட்​டது" என்​றார்.