惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
C
Check Point Blog
J
Java Code Geeks
腾讯CDC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
宝玉的分享
宝玉的分享
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
WordPress大学
WordPress大学
量子位
Google DeepMind News
Google DeepMind News
I
InfoQ
The GitHub Blog
The GitHub Blog
aimingoo的专栏
aimingoo的专栏
N
Netflix TechBlog - Medium
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - Franky
V
V2EX
Blog — PlanetScale
Blog — PlanetScale
T
The Blog of Author Tim Ferriss
小众软件
小众软件
博客园_首页
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 聂微东
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சமூக வலைதள பக்கங்கள் ‘முடக்...
2026-05-23 · via hindutamil

மர்ம நபர்கள் ‘ஹேக்’ செய்ததால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (cockroach janata party) அனைத்து சமூக வலைதள கணக்குகளும், இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது. ‘எங்களைப் பார்த்து இந்திய அரசு அஞ்சுகிறது’ என்று அப்ஜித் தீப்கே சாடியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “காக்ரோச் ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கம் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தை தவிர்த்து இதர அனைத்து சமூக வலைதளங்களும் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளன. எங்களது இணையதளத்தில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்திருந்தனர். அந்த இணையதளமும் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளது.

நாங்கள் கரப்பான் பூச்சிகள். எங்களைப் பார்த்து இந்திய அரசு அஞ்சுகிறது. எங்கள் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது சர்வாதிகார நடவடிக்கை ஆகும். இந்திய இளைஞர்களுக்கு வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. காக்ரோச் ஜனதா கட்சியின் எந்தவொரு சமூக வலைதள கணக்கும் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அவற்றில் வெளியாகும் எந்தப் பதிவுகளையும் நம்ப வேண்டாம். கரப்பான்பூச்சிகள் சாகாது. நாங்கள் புதிய வடிவில் மீண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.

‘சிஜேபி’ பின்புலம் என்ன?

போலி சான்​றிதழ் தொடர்​பான ஒரு வழக்கை அண்மை​யில் விசா​ரித்த உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறும்​போது, “வேலை இல்​லாமல் எந்த தொழிலும் செய்ய தகு​தி​யற்ற சில இளைஞர்​கள் கரப்​பான்​பூச்​சிகளை போல, ஒட்​டுண்​ணி​களைப் போல சமூக வலை​தளங்​களில் எல்லோரையும் தாக்​கத் தொடங்​கு​கிறார்​கள்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு இணையத்தில் இளைஞர்கள் கடும் எதிர்வினையாற்றினர். “கரப்பான்பூச்சிகளை அழிப்பது அவ்வளவு எளிதல்ல.. அதுபோலத்தான் நாங்கள்...” என்று அவர்கள் காத்திரம் காட்டினர். இதனிடையே, தனது கருத்து குறித்து விளக்​கம் அளித்த நீதிபதி சூர்​ய​காந்த், “போலி சான்​றிதழ் வைத்​திருப்​பவர்​களை மட்​டுமே குறிப்​பிட்​டேன். ஒட்​டுமொத்த இளைஞர்​களை அல்ல” என்று தெரி​வித்​தார்.

இந்தச் சூழலில்தான் அமெரிக்​கா​வின் பாஸ்​டன் பல்​கலைக்​கழகத்​தில் பயிலும் இந்​திய மாணவர் அப்​ஜித் தீப்கே என்​பவர் கடந்த 16-ம் தேதி இன்​ஸ்டாகி​ராமில், ‘காக்ரோச் ஜனதா கட்​சி’ என்ற பக்​கத்தை அரசியல் நையாண்டி நோக்குடன் தொடங்​கி​னார். எக்​ஸ், ஃபேஸ்​புக் உள்​ளிட்ட இதர சமூக வலைதளங்​களி​லும் இதே பெயரில் கணக்​கு​கள் தொடங்​கப்​பட்​டன.

கரப்​பான்பூச்சி ஜனதா கட்​சி​யில் இணைய வேலை ​வாய்ப்​பற்​றவ​ராக இருக்க வேண்​டும். சோம்​பேறி​யாக இருக்க வேண்​டும். ஆன்லைனுக்கு அடிமை​யாக இருக்க வேண்​டும். கோபத்தை அழகாக வெளிப்​படுத்த தெரிந்​தவ​ராக இருக்க வேண்​டும் என்று அப்​ஜித் கூறியிருந்தார். மேலும், ஒரு கட்​சி​யில் இருந்து தேர்வு செய்​யப்​பட்ட எம்.​பி., எம்எல்ஏக்​கள் தேர்​தலுக்​குப் பிறகு அணி மாறி​னால் அடுத்த 20 ஆண்​டு​கள் அவர்​கள் தேர்​தலில் போட்​டி​யிட தடை விதிக்​கப்​படும் என்பது உட்பட அப்​ஜித் 5 வாக்​குறுதி அளித்​திருந்தார்.

“தங்கள் குரல் கேட்கப்படவில்லை. பிரதிநிதித்துவமும் பெறவில்லை என்ற விரக்தியில் இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள்” என்ற அப்​ஜித் தீப்கே, “இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகள் ஏறுமுகம் காட்டினாலும் கூட, வேலை நிமித்தமான பதற்றங்கள், சமத்துவமின்மை, விலைவாசி உயர்வு தரும் நெருக்கடிகள் இருக்கத்தானே செய்கின்றன. கல்வி வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான உத்தரவாதத்தைத் தருவதாக இல்லை. வாழ்க்கைத்தரம் மேல்நோக்கி நகரும் என்பதற்கு உறுதியைத் தருவதாக இல்லை.

இந்திய ஜென்ஸீ இளைஞர்கள், பாரம்பரிய அரசியல் கட்சிகளைக் கைவிடத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் வேதனையை, மொழியை அறிந்த புதிய அரசியல் அமைப்புகளை விரும்புகின்றனர். சிஜேபி பக்கத்தில் வரும் கருத்துகள் அதையே பிரதிபலிக்கின்றன. அங்கே வரும் இளைஞர்கள், “எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது” என்று போலியாகச் சொல்ல விரும்பாதவர்கள் இந்த இளைஞர்கள்” என்றார் அப்ஜித் தீப்கே.

இணையவாசிகளின் கவனம் ஈர்த்த கரப்​பான் பூச்சி கட்​சி​யின் இன்​ஸ்​டாகி​ராம் பக்​கம் சட்டென பல மில்லியன்களில் ஃபாலோயர்களை எட்டியது. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ இன்ஸ்டா பக்கத்தின் ஃபாலோயர்களின் எண்ணிக்கையை முந்தியது. எக்​ஸ், பேஸ்​புக் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களி​லும் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி பக்​கங்​களை பின்தொடர்​வோரின் எண்​ணிக்கை லட்சங்களில் அதி​கரிக்கத் தொடங்கியது.

அப்போது திடீரென அந்தக் கட்​சி​யின் எக்ஸ் சமூக வலைதள பக்​கம் இந்தியாவில் முடக்​கப்​பட்​டது. அடுத்த சில மணி நேரங்​களில் கரப்பான்​பூச்​சிகள் ஒரு​போதும் உயி​ரிழப்​பது இல்லை என்ற வாசகத்​துடன் காக்​ரோச் இஸ் பேக் என்ற டேக் உடன் எக்ஸ் தளத்​தில் புதிய பக்​கம் தொடங்​கப்​பட்​டது.

இந்தச் சூழலில்தான் அபிஜித் தீப்கே சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஆன்லைனில் புதிய கட்சியை தொடங்கிய பிறகு சமூக வலைதளங்கள் வாயிலாக எனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான். எங்களது கட்சி சார்பில் முதல் கோரிக்கையை முன்வைக்கிறோம். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும். இதுதொடர்பான ஆன்லைன் மனுவில் பொதுமக்கள் கையெழுத்திட வேண்டுகிறேன். அரசு நிர்வாகத் தவறுகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்” என்றார்.

அதேவேளையில், மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜிநகரில் வசித்து வரும் அபிஜித் தீப்கேவின் பெற்றோர், “எனது மகன் அபிஜித் அரசியலில் நுழைவதை நாங்கள் விரும்பவில்லை. அவர் ஆன்லைனில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை தொடங்கிய நாள் முதல் எங்களது தூக்கத்தை தொலைத்துவிட்டோம். புதிய கட்சிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் எங்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. எங்கள் மகன் இந்தியா திரும்பினால் கைது செய்யப்படுவார் என்று அஞ்சுகிறோம். இந்தியாவில் இருந்தபோது ஆம் ஆத்மியில் சிறிது காலம் எங்களது மகன் பணியாற்றினார். அப்போதே நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம்” என்று கவலை தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறும்போது, “கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் திடீர் வளர்ச்சி வியப்பளிக்கிறது. அதன் சமூக வலைதள பக்கங்களை முடக்கக் கூடாது. இளைஞர்கள் கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். ஜனநாயகத்தில் அனைவரும் கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் களத்தில், இளைஞர்கள் தங்கள் கோபத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் புகலிடமாக இருக்கும் சிஜேபி, காணாமல் போகலாம். அது பிரபலமான அதே வேகத்தில் இல்லாமல் போகலாம். ஆனாலும், இந்திய அரசியலில் சிஜேபியும், கரப்பான்பூச்சி எனும் சூப்பர் ஸ்டாரும் ஏற்கெனவே ஒரு புதுமையைப் புகுத்திவிட்டன. காட்சிகள் மாறினாலும் இந்த அலை ஓயாது எனலாம். மீம் பார்ட்டியும், பூச்சி சின்னமும் இந்திய இளைஞர்களின் கோபத்தின் சாட்சியாக வரலாற்றில் நிற்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.