惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
博客园 - 聂微东
J
Java Code Geeks
Engineering at Meta
Engineering at Meta
Jina AI
Jina AI
D
Docker
B
Blog
S
SegmentFault 最新的问题
宝玉的分享
宝玉的分享
D
DataBreaches.Net
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Y
Y Combinator Blog
N
Netflix TechBlog - Medium
月光博客
月光博客
F
Fortinet All Blogs
爱范儿
爱范儿
H
Help Net Security
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
WordPress大学
WordPress大学
The Cloudflare Blog
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
போதிய பேருந்துகள் இல்லாததால் கிளாம்பாக்கம், செங்கையில் பய...
2026-04-24 · via hindutamil

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்த பயணிகள் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர். | படங்கள்: எம்.முத்துகணேஷ் |

Updated on

2 min read

செங்கல்பட்டு / காஞ்சிபுரம்: சட்​டப்​பேரவை தேர்​தலில் வாக்​களிக்க போதிய பேருந்​துகள் இல்​லாத​தால் கிளாம்​பாக்​கம், செங்​கல்​பட்​டில் பயணி​கள் பல மணி நேரம் காத்​திருந்து அதிருப்​தி​யடைந்து மறியல் போரட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்​டி சொந்த ஊர்​களுக்​குச் சென்று வாக்​களிக்க நேற்று முன் தினம் கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​தில் பயணி​கள் திரண்​ட​தால் பெரும் பரபரப்பு ஏற்​பட்​டது. போதிய பேருந்துகள் இல்லை எனக் கூறி பயணி​கள் சாலை மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

தென் மாவட்​டங்​களுக்கு செல்​லும் ஏழை மற்​றும் நடுத்தர மக்​கள் அரசுப் பேருந்​துகளை நாடி கிளாம்​பாக்​கத்​தில் குவிந்​தனர். திருச்​சி, மதுரை, கோவை, திருநெல்​வேலி உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களுக்​குப் போதிய பேருந்​துகள் இயக்​கப்​பட​வில்​லை.

இதனால் பெண்​கள், குழந்​தைகள் என ஆயிரக்​கணக்​கான பயணி​கள் விடிய விடிய பேருந்து நிலை​யத்​திலேயே காத்​திருக்​கும் நிலை நேரிட்​டது. பேருந்​துகள் வந்​த​போது மக்​கள் முண்​டியடித்து ஏறிய​தால் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

இதில், ஆத்​திரமடைந்த பயணி​கள் போக்​கு​வரத்து அதி​காரி​களு​டன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். ஒரு​கட்​டத்​தில் பேருந்து நிலை​யத்​துக்கு உள்​ளேயே அமர்ந்து பயணி​கள் போராட்​டம் நடத்​தினர்.

மேலும், அவர்​கள் ஜிஎஸ்டி சாலை​யில் மறியலில் ஈடுபட முயன்​ற​போது போலீ​ஸார் தடுத்து நிறுத்தி பேச்​சு​வார்த்தை நடத்​தினர். நேற்று அதி​காலை 4 மணி வரை பயணி​கள் அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இருப்​பினும் கூட்​டத்​தைக் கட்​டுப்​படுத்த முடி​யாமல் வண்​டலூர் ஜிஎஸ்​டி சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. அதி​காரி​கள் முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை எடுக்​க​வில்லை என பயணி​கள் குற்​றம் சாட்​டினர்.

மேலும், நேற்று காலை 9 மணிக்கு பேருந்து இல்​லாத​தால், திண்​டிவனம், திரு​வண்​ணா​மலை, வந்​த​வாசி, செய்​யூர் விழுப்​புரம் சேலம் போன்ற இடங்​களுக்கு செல்​லும் பயணி​கள் கடும் அவதி​யடைந்​தனர். அப்​போது மீண்​டும் பயணி​கள் கிளாம்​பாக்​கத்​தில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதனால் சுமார் 3 மணி நேரம் ஜி.எஸ்​.டி சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதனால் சொந்த வாடகை வாக​னத்​தில் ஊருக்கு சென்​றவர்​கள் அவதி​யடைந்​தனர்.

கல்​பாக்​கம், வந்​த​வாசி, திரு​வண்​ணா​மலை, மது​ராந்​தகம், திண்​டிவனம், செய்​யூர் மற்​றும் அதனை சுற்​றி​யுள்ள கிராம பகு​தி​களுக்கு காலை 10 மணி முதல் பேருந்து இல்​லாத​தால் செங்​கல்​பட்டு பேருந்து நிலை​யம் அருகே பயணி​கள் மறியலில் ஈடு​பட்​டனர்​. பின்​னர்​ பல மணி நேரம்​ கழித்​து பேருந்​துகள்​ இயக்​கப்​பட்​டன.

தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில், போதிய பேருந்து வசதி இல்லாமலும், உணவகங்கள் மூடப்பட்டதாலும் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பலமணி நேரம் காத்திருந்து பேருந்தில் சென்றனர்.