惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
博客园_首页
S
SegmentFault 最新的问题
罗磊的独立博客
博客园 - 【当耐特】
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
Docker
雷峰网
雷峰网
Google DeepMind News
Google DeepMind News
博客园 - 司徒正美
V
V2EX
大猫的无限游戏
大猫的无限游戏
V
Visual Studio Blog
腾讯CDC
宝玉的分享
宝玉的分享
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
人人都是产品经理
人人都是产品经理
T
Tailwind CSS Blog
Vercel News
Vercel News
H
Help Net Security
博客园 - Franky
D
DataBreaches.Net
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சேலத்தில் தொடங்கப்பட்டது முதல்வர் விஜய் அறிவித்த ‘சிங்கப்...
2026-05-14 · via hindutamil

Updated on

2 min read

சேலம்: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக முதல்வர் விஜய் அறிவித்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் (Singappen Special Force SSF) சேலம் மாநகராட்சியில் இன்று முதல் தனது பணியைத் தொடங்கியது. முதற்கட்டமாக, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பெண் காவலர்கள் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக முதல்வராக பதவி ஏற்றதும், முதல்வர் விஜய் பெண்கள் பாதுகாப்புக்கு என தமிழகத்தில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக சேலம் மாநகர காவல் துறையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் , சேலம் மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி மேற்பார்வையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" அமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சூரமங்கலம் சரக உதவி ஆணையர் ரமளி ராமலட்சுமி கண்காணிப்பில், எஸ் ஐ., அருள்மொழி. எஸ் எஸ் ஐ., க்கள் அம்சவள்ளி, சத்தியவதி, பெண் தலைமை காவலர்கள் பிரேமலதா, மங்கையர்க்கரசி ஆகியோரைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதிரடிப்படை வாகனத்தின் ஓட்டுநர் மட்டும் ஆண் காவலர் ஆவார்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் (SSF) செயல்பாடுகள்:

குற்றச்சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணித்தல், .பொது இடங்களில் தொடர்ந்து ரோந்து மேற்கொண்டு, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குதல், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள். கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்வது.

சட்டவிரோத மற்றும் பெண்களுக்கு எதிரான செயல்களை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுப்பது, பெறப்படும் புகார்களுக்கு உடனடி மற்றும் உரிய நடவடிக்கை மேற்கொள்வது.

பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் நபர்களை மீட்டு அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது, தேவையான உதவிகள் மற்றும் ஆதரவுகள் உரிய நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்வது, சமூக நலத்துறை கல்வித்துறை மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது.

சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் இணைத்து பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவது, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படுவது, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் நோக்கங்கள் ஆகும். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை முதற்கட்டமாக காவல்துறை தலைமையக நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும்.

இச்சிறப்பு படையினருக்கு தேவையான நான்கு சக்கர வாகனம் சாதனங்கள், Body Worn Camera மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் பணியை தொடங்கி வைத்த சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் கிரி அதிரடிப்படையினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்

பின்னர் மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெண்கள் பிரச்சினை தொடர்பாக புகார் செய்தால் அல்லது அவசர அழைப்பிற்கு தொடர்பு கொண்டால் உடனே சிங்கப்பெண் அதிரடி படை அங்கு சென்று தேவையான உதவிகள் மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.