惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - Franky
J
Java Code Geeks
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Jina AI
Jina AI
博客园 - 司徒正美
Stack Overflow Blog
Stack Overflow Blog
美团技术团队
L
LangChain Blog
WordPress大学
WordPress大学
A
About on SuperTechFans
Martin Fowler
Martin Fowler
月光博客
月光博客
Y
Y Combinator Blog
U
Unit 42
D
Docker
Recent Announcements
Recent Announcements
Hugging Face - Blog
Hugging Face - Blog
B
Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
G
Google Developers Blog
Last Week in AI
Last Week in AI
T
The Blog of Author Tim Ferriss
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
​காஸ் சிலிண்டர் விநியோகத்தில் இன்று முதல் ஓடிபி எண் கட்டாயம்
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: காஸ் சிலிண்​டர் விநி​யோகத்​தில் ஓடிபி எண் இன்று முதல் கட்​டாய​மாகிறது. ஓடிபி எண் இருந்​தால் மட்​டுமே சிலிண்​டர்​களை வழங்க, விநி​யோகிப்​பவர்​களுக்கு எண்​ணெய் நிறு​வனங்​கள் தரப்​பில் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

ஈரான்​-அமெரிக்கா போர் காரண​மாக, கடந்த மார்ச் மாதத் தொடக்​கத்​தில், இந்​தி​யா​வுக்கு எரிபொருள் ஏற்றி வரும் கப்​பல் போக்​கு​வரத்து தடைப்​பட்​டது.

இதனால் காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு ஏற்​படத் தொடங்​கியது. மார்ச் 9-ம் தேதி முதல் வணி​கப் பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்​டர் விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டது.

அதே​நேரத்​தில், வீட்டு உபயோக சிலிண்​டர் தடை​யின்றி விநி​யோகிக்​கப்​படு​கிறது. மேலும், வீட்டு உபயோக காஸ் சிலிண்​டர் முன்​ப​திவு இடைவெளியை பொருத்​தவரை, நகரங்​களில் 25 நாட்​களாக​வும், கிராமப்​புறங்​களில் 45 நாட்​களாக​வும் உறு​திப்​படுத்​தப்​பட்​டது.

இதை பின்​பற்​றி, வீட்டு உபயோக சிலிண்​டர் புக்​கிங் செய்​தா​லும், ஒரு சில இடங்​களில் காஸ் சிலிண்​டர் கிடைப்​ப​தில் தாமதம் ஏற்​படு​கிறது. இதை தவிர்க்க மத்​திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரு​கிறது.

இதற்​கிடை​யில் ஓடிபி அடிப்​படையி​லான சிலிண்​டர் டெலிவரி முறை இன்​று​முதல் கட்​டாய​மாகிறது. அதாவது ஓடிபி அடிப்​படையி​லான சிலிண்​டர் டெலிவரி 100 சதவீதம் நடை​முறைக்கு வரு​கிறது.

தற்​போது நாட்​டில் 94 சதவீதம் அளவில் இருக்​கும் இந்த நடைமுறை முழு​மை​யாக செயல்​படுத்​தப்​படு​கிறது. இந்த புதிய மாற்​றத்​தின் மூலம், சிலிண்​டர் திருட்டு மற்​றும் கள்​ளச்​சந்​தை​யில் சிலிண்​டர் விற்​பனை செய்​யப்​படு​வது முழு​மை​யாகத் தடுக்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதுகுறித்​து, எண்​ணெய் நிறுவன அதி​காரி ஒரு​வர் கூறுகை​யில், “காஸ் சிலிண்​டரை ஓடிபி எண் முறை​யில் விநி​யோகிக்​கும் நடை​முறை ஏற்​கெனவே செயல்​பாட்​டில் உள்​ளது.

இப்​போது இது கட்​டாய​மாக்​கப்​படு​கிறது. எங்​களின் சிலிண்​டர்​களை விநி​யோகிப்​பவர்​களிடம், வாடிக்​கை​யாளர்​கள் தவிர பிறருக்கு சிலிண்​டர்​கள் செல்​வதைத் தடுக்க, கட்​டா​யம் ஓடிபி எண் வாங்க வேண்​டும் எனத் தெரி​வித்​துள்​ளோம். இதன்​மூலம், சரி​யான வாடிக்​கை​யாள​ருக்கு காஸ் சிலிண்டர் செல்வது உறுதி செய்யப்படும்'' என்றார்.