


























Updated on:
சென்னை: கடந்த ஆட்சியில் இலவசப் பள்ளிக்கு ஒப்புதல் பெற பணம் கேட்கப்பட்டது. தற்போது தவெக ஆட்சியில் ஒப்புதல் உடனடியாக கிடைத்துவிட்டது என்று தவெக அரசை ஸ்ரீதர் வேம்பு பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: கிராமப்புற குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிப்பதற்காக நாங்கள் கலைவாணி கல்வி மையம் என்ற பள்ளியை தொடங்கினோம்.
அப்பள்ளிக்கு கடந்த ஆட்சியில் ஒப்புதல் பெறுவதற்கு கால தாமதத்தை சந்திக்க வேண்டி இருந்தது.
மேலும், குறிப்பட்ட அளவு பணமும் கேட்கப்பட்டது. இலவச பள்ளியாக இருந்தாலும் இது ஒன்று மட்டுமே வழி என கூறப்பட்டது.
தற்போது முதல்வராக விஜய் வந்த பிறகு, ஒப்புதல் உடனடியாக கிடைத்துவிட்டது. நமது மாநிலத்தில் இதுபோன்ற நேர்மறையான முன்னேற்றம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இத்தகைய புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை தந்த முதல்வர் விஜய்க்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。