


















Updated on:
ராமேசுவரம்: தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: தமிழகத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள முதல்வர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையை அடித்தளமாகக் கொண்ட ஒரு புதிய யுகத்தைப் பற்றி பேசினீர்கள். வெறுப்பு மற்றும் பழைய காயங்களின் மீது கட்டப்பட்ட சமூகங்கள் இறுதியில் தனித்து விடப்படும் என்பதையும், அதே நேரத்தில் நீதி மற்றும் சகவாழ்வின் மீது கட்டப்பட்ட சமூகங்களே மக்கள் உண்மையாக வாழ விரும்பும் எதிர்காலத்தை உருவாக்கும் என்பதையும் வரலாறு நமக்குக் காட்டியுள்ளது.
உலகம் ஏற்கெனவே பிரிவினைகளால் நிறைந்துள்ளது. நமது பிராந்தியத்தில் உள்ள மக்கள் அனைவரும் மொழி, மதம் அல்லது அடையாளம் கடந்து உண்மையாக எதிர்பார்ப்பது சமூக முன்னேற்றம், நீதி மற்றும் நிலையான தன்மையே ஆகும்.
நம்மைப் பிரிக்கும் விஷயங்களைவிட, நம்மிடையே உள்ள பொதுவான பண்புகளும் ஒற்றுமைகளும் மிக அதிகம். உங்களின் இந்தப் புதிய அத்தியாயம் முன்னேற்றத்தையும், கருணையையும், கடந்த காலத்தில் மற்றவர்கள் இடைவெளியை உருவாக்கிய இடங்களில் புரிதலையும் ஏற்படுத்துவதற்கான ஆற்றலை கொண்டு வருமென எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。