




















தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பின்புலம் குறித்து சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
நேர்மை மற்றும் கண்டிப்புக்கு பெயர் பெற்ற அஸ்ரா கார்க், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தவர். 2004-ல் நேரடி ஐபிஎஸ் ஆக தேர்வான இவர், தமிழகப் பிரிவு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். பி.இ. பட்டம் பெற்றுள்ள அஸ்ரா கார்க் தமிழ், பஞ்சாபி, இந்தி, ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உதவி எஸ்.பி.யாக பணியைத் தொடங்கி நெல்லை, மதுரை, தருமபுரி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி மக்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பின்னர் பதவி உயர்வு பெற்று டெல்லி சிபிஐயில் பணியாற்றினார்.
அதைத் தொடர்ந்து மீண்டும் தமிழகம் திரும்பிய அவர், தென்மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். பின்னர் வட சென்னை காவல் கூடுதல் ஆணையராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றிய நிலையில், தற்போது உளவுத் துறை ஐ.ஜி. ஆகியுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。