惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Help Net Security
G
Google Developers Blog
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 聂微东
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
小众软件
小众软件
Stack Overflow Blog
Stack Overflow Blog
美团技术团队
博客园_首页
T
Tailwind CSS Blog
博客园 - 三生石上(FineUI控件)
B
Blog
D
DataBreaches.Net
腾讯CDC
C
Check Point Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
U
Unit 42
月光博客
月光博客
V
V2EX
Vercel News
Vercel News
T
The Blog of Author Tim Ferriss
The Cloudflare Blog
博客园 - 叶小钗
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வடகொரியாவில் இருந்து தப்பிக்க மீனவர்கள் போல் உளவு பார்த்த...
2026-04-26 · via hindutamil

Updated on

2 min read

சியோல்: வடகொரி​யா​வைச் சேர்ந்த 9 பேர் கொண்ட ஒரு குடும்பம் 10 ஆண்​டு​கள் திட்​ட​மிட்​டு, 2 மணி நேரத்​தில் தப்பி தென் கொரியா சென்​றுள்​ளது.

வட கொரி​யா​வில் அதிபர் கிம் ஜாங் உன் தலை​மை​யில் அடக்​கு​முறை கம்​யூனிச ஆட்சி நடைபெறுகிறது. இங்​குள்ள மக்​களுக்கு போதிய சுதந்​திரம் இல்​லை. அங்கு வறுமை, பஞ்​சம் நில​வு​கிறது. அரசி​யல் ஒடுக்​கு​முறை மற்​றும் அடிப்​படை மனித உரிமை​கள் இல்​லாமல் இருப்​ப​தால் இங்​குள்ள மக்​கள் தென் கொரி​யா​வுக்கு தப்​பிச் செல்ல விரும்​பு​கின்​றனர்.

வட கொரி​யா​வைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குடும்​பம் ஒன்​று, அங்கு வாழ பிடிக்​காமல் தென்​கொரி​யா​வுக்கு தப்​பிச் செல்ல கடந்த 10 ஆண்​டு​களாக திட்​ட​மிட்​டது. கடல் வழி​யாக தப்​பிச் செல்​வது​தான் ஒரே வழி. இதனால் மீனவர்​கள் போல் தப்​பிச் செல்ல கிம் இல்​-ஹியோக் என்​பவரின் தந்தை யோசனை கூறி​னார். இதனால் அவரது குடும்​பம் கடற்​கரை நகரில் குடியேறியது. அங்கு கிம் இல்​-ஹியோக், அவரது சகோ​தரர் கிம் யி-ஹியோக் ஆகியோர் படகு ஒன்றை வாங்கி மீன்பிடித் தொழிலை கற்​றனர். அடிக்​கடி கடலுக்கு சென்று அங்கு கடற்​படை​யின் ரோந்து பணி விவரங்​களை உளவு பார்த்தனர்.

இவர்​களின் திட்​டம் நிறைவேறு​வதற்​குள் கிம் சகோ​தரர்​களின் தந்தை இறந்து விட்​டார். கடந்த 2023-ம் ஆண்டு மே 6-ம் தேதி மஞ்சள் கடலில் லேசான புயல் உரு​வாகியது. அந்த நேரத்​தில் ரோந்து பணி தீவிர​மாக இருக்​காது. மேலும், கடல் தெளிவு இல்​லாமல் மங்​கலாக இருப்​ப​தால் ரேடார் கண்​காணிப்​பில் இருந்​தும் எளி​தாக தப்​பிக்​கலாம். கிம் சகோ​தரர்​களின் குடும்​பம் இரவு ரோந்து போலீ​ஸாருக்கு லஞ்​சம் கொடுத்து தங்​கள் பயணத்தை தொடங்​கினர்.

கிம் இல்​-ஹியோக்​கின் 5 மாதக் கர்ப்​பிணி மனைவி உட்பட அந்​தக் குழு​விலிருந்த பெண்​கள் மற்​றும் 2 குழந்​தைகள் முதலில் கண்​ணிவெடிகள் நிறைந்த பகு​தியை நடை பயண​மாக கடந்து சென்று படகில் ஏறினர். குழந்தைகளை சணல் சாக்​கு​களுக்​குள் மறைத்து வைத்​தனர்.

மீன்​பிடி படகு மஞ்​சள் கடலில் மிக​வும் மெது​வாக பயணித்​தது. அப்​போது​தான் ரேடார் கண்​காணிப்​பில் கடலில் ஏதோ ஒரு பொருள் மிதப்​பது போல் தெரி​யும். 2 மணி நேரத்​துக்​குள் அவர்​கள் வடகொரிய கடல் எல்​லையை கடந்து தென்​கொரிய கடல் பகு​திக்​குள் நுழைந்தனர். தென் கொரி​யா​வின் யியோன்​பியோங் தீவை நெருங்​கியதும், அவர்​களை அந்​நாட்டு கடற்​படை​யினர் மீட்டனர்.

தென்​கொரி​யா​வில் அந்த குடும்​பம் மகிழ்ச்​சி​யாக வாழத் தொடங்கியது. நான்கு மாதங்​களுக்​குப் பிறகு, சியோலில் கிம் இல்​-ஹியோக்​கின் மனை​விக்கு ஒரு பெண் குழந்தை பிறந்​தது. ஆனால், சில மாதங்​களுக்​குப் பிறகு, கிம் இல் -ஹி​யோக்​கின் இளைய சகோ​தரர் கிம் யி-ஹியோக், ஸ்கூபா டைவிங் விபத்​தில் இறந்​தார்.

கிம் இல்​-ஹியோக் தற்​போது தென் கொரி​யா​வில் சமையல் கலைஞ​ராகப் பயிற்சி பெற்று வரு​கிறார். கடந்த மார்ச் மாதம் இவருக்கு 2-வது பெண் குழந்தை பிறந்​தது. இவரது குடும்​பம் தற்போது தென்​கொரி​யா​வில்​ சற்​று நிம்​ம​தி​யான வாழ்க்​கை வாழ்​கிறது.