惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
V
Visual Studio Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
云风的 BLOG
云风的 BLOG
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 司徒正美
Y
Y Combinator Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
雷峰网
雷峰网
小众软件
小众软件
GbyAI
GbyAI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
aimingoo的专栏
aimingoo的专栏
MyScale Blog
MyScale Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
腾讯CDC
A
About on SuperTechFans
宝玉的分享
宝玉的分享
WordPress大学
WordPress大学
B
Blog RSS Feed
G
Google Developers Blog
量子位
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 三生石上(FineUI控件)

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பண்ட், ஸ்டார்க், வெங்கடேஷ் அய்யர் - ஐபிஎல் வரலாறு காணாத ச...
ஆர்.முத்துக்குமார் · 2026-06-24 · via hindutamil

Updated on: 

ஐபிஎல் ஏலங்களில் பெரிய சம்பளம் என்று வாய்பிளந்த வீரர்கள் சிலருக்கு பெரிய அளவில் சம்பளக் குறைப்பு நிகழ்ந்துள்ளது. இந்தப் பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பவர் ரிஷப் பண்ட்.

ஐபிஎல் 2025 தொடருக்காக ரூ.27 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட ரிஷப் பண்ட் இப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரூ. 15 கோடியாகக் குறைக்கப்பட்ட சம்பளத்தில் சென்றுள்ளார்.

அதே போல் சம்பளக் குறைப்பு கண்ட வீரர்கள் பட்டியல் இதோ:

1.வெங்கடேஷ் அய்யர்:

2025 ஐபிஎல் ஏலத்தில் ரூ.23.75 கோடிக்கு கேகேஆர் அணியால் தக்கவைக்கப்பட்ட வெங்கடேஷ் அய்யர் 2026 சீசனுக்கு முன்னதாக வெறும் ரூ.7 கோடிக்கு ஆர்சிபி அணியில் சேர்ந்தார்.

2025 ஏலத்தின்போது வெங்கடேஷ் ஐயரை வாங்குவதற்காக கடும் ஏலப்போட்டியில் இறங்கியுஜ் அவரை கைப்பற்ற முடியாமல் போன ஆர்சிபி ஓர் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த தொகையில் அவரை அணிக்குள் கொண்டு வந்தது.

ஆரம்பத்தில் மாற்று பேட்ஸ்மேனாக அணியில் சேர்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர், சீசனின் முக்கியமான கட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். முக்கிய வீரர்களான ஃபில் சால்ட் மற்றும் ஜேக்கப் பெத்தெல் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அவர், ஆறு இன்னிங்ஸ்களில் 209 ரன்கள் குவித்து, 186.60 என்ற அதிரடி ஸ்டிரைக் ரேட்டை பதிவு செய்தார்.

இதன் மூலம், வெங்கடேஷ் ஐயர் தனது ஐபிஎல் வாழ்க்கையில் சாம்பியன் பட்டத்தை வென்ற இரண்டு வெவ்வேறு அணிகளில் ஆடிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் 2024-ல் கேகேஆர் அணி, 2026-ல் ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்ற போது இவ்வணிகளில் ஆடினார்.

2. ரூ.18.5 கோடியிலிருந்து ரூ.2.5 கோடிக்கு வீழ்ந்த சாம் கரன்

2024 ஐபிஎல் தொடரில் ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியினால் எலம் எடுக்கப்பட்ட சாம் கரன், 2025-ல் சிஎஸ்கே அணியில் ரூ.2.5 கோடி சம்பளத்தில் இணைந்தார். 5 போட்டிகளில்தான் ஆட முடிந்தது. இது ஒரு மோசமான மாற்றமாக சாம் கரனுக்கு அமைந்தது.

3.ரூ.15 கோடியிலிருந்து வெறும் 1 கோடிக்கு சரிந்த கைலி ஜேமிசன்:

நியூஸிலாந்து ஸ்டார் ஆல்ரவுண்டர் இவர் ஐபிஎல் 2021-ல் பெரிய எதிர்பார்ப்புடன் ஆர்சிபி அணியினால் ரூ. 15 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் போன பிறகே உயரமான ஆல்ரவுண்ட தேவை என்று கைலி ஜேமிசனை அணியில் எடுத்தனர். சீசன் சரிவர அமையவில்லை, கோவிட் -19 தாக்கம் இவற்றால் இவரால் 2022 ஐபிஎல் தொடரில் ஆட முடியவில்லை இதனையடுத்து ஆர்சிபி இவரை ரூ.1 கோடி சம்பளத்தில் சிஎஸ்கேவுக்கு விடுவித்தது.

4. சம்பளம் பாதியாகக் குறைந்த மிட்செல் ஸ்டார்க்:

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சத் தொகையில் ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்று மிட்செல் ஸ்டார்க் கேகேஆர் அணியினால் 2024ம் ஆண்டு ரூ.24.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிளே ஆஃப் சுற்றில் அருமையாக வீசினார். ஆனாலும் அணிகளின் நிதி ‘நெருக்கடி’(!) காரணமாக அவர் மீண்டும் ஏலத்திற்கு வர நேரிட்டது அப்போது 2025-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியினால் ரூ.11.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

5. ரூ.15 கோடியிலிருந்து ரூ. 1 கோடிக்குச் சரிந்த ஜை ரிச்சர்ட்ஸன்:

பீபிஎல் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக இவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2021 ஏலத்தில் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஆனால், கோவிட் தொற்று பரவலால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், அவர் வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது.

செப்டம்பரில் மீண்டும் தொடங்கிய ஐபிஎல்லின் இரண்டாம் பாதியில் ஜை ரிச்சர்ட்சன் பங்கேற்கவில்லை. இதன் பின்னர் பஞ்சாப் கிங்ஸ் அவரை விடுவித்ததால், அடுத்த ஆண்டு நடந்த ஏலத்தில் அவர் எந்த அணியாலும் வாங்கப்படாமல் போனார்.

பின்னர் 2023 ஆம் ஆண்டு, அடிப்படை விலைக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனினும், தொடை பின்புற தசை (ஹாம்ஸ்ட்ரிங்) காயம் மீண்டும் ஏற்பட்டதால், அந்த சீசனையும் முழுமையாக தவறவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.