惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
IT之家
IT之家
The Cloudflare Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
WordPress大学
WordPress大学
N
Netflix TechBlog - Medium
阮一峰的网络日志
阮一峰的网络日志
P
Proofpoint News Feed
L
LangChain Blog
博客园 - Franky
美团技术团队
J
Java Code Geeks
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 叶小钗
小众软件
小众软件
Y
Y Combinator Blog
B
Blog RSS Feed
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
D
Docker
Hugging Face - Blog
Hugging Face - Blog
Jina AI
Jina AI
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
Vercel News
Vercel News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அரசு பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஒரு உயர்கல்வி வழிகாட்டி...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

Updated on: 

சென்னை: அரசுப் பள்​ளி​களில் 250 மாணவர்​களுக்கு ஓர் உயர்கல்வி வழி​காட்டி ஆசிரியர் இருக்க வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் படிக்​கும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையி​லான மாணவர்​களுக்கு உயர்​கல்வி குறித்த வழி​காட்​டு​தல்​களை வழங்​கி, சேர்க்​கையை உறுதி செய்​வதற்​காக, பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் ‘உயர்​கல்வி வழி​காட்டி திட்​டம்’ செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

இத்​திட்​டத்​தின்​கீழ் ஒவ்​வொரு அரசு உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​யிலும், வகுப்பு ஆசிரியர்​கள் உயர்​கல்வி வழி​காட்​டிகளாக நியமிக்​கப்​படு​கின்​றனர்.

கல்​லூரிக் கல்​வி, தொழிற்​கல்வி படிப்​பு​கள் மற்​றும் அதற்​கான நுழைவுத் தேர்​வு​கள் குறித்த தகவல்​களை அவர்​கள் மாணவர்​களுக்கு தெரிவிக்​கின்​றனர். பின்​தங்​கிய மற்​றும் சிறப்பு கவனம் தேவைப்​படும் மாணவர்​களைக் கண்​டறிந்​து, அவர்​கள் உயர்​கல்​வியைத் தொடர்​வதை உறுதி செய்​வதற்​கான நடவடிக்​கைகளை​யும் மேற்​கொள்​கின்​றனர்.

இந்​நிலை​யில், இத்​திட்​டம் தொடர்​பாக மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்கு மாதிரிப் பள்​ளி​கள் உறுப்​பினர் செயலர் இரா.சுதன் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: உயர்​கல்வி வழி​காட்டி திட்​டத்​தின் கீழ் கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசுப் பள்​ளி​களில் உயர்​கல்வி வழி​காட்டி ஆசிரியர்​களை நியமிக்க தலைமை ஆசிரியர்​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டது. அந்த ஆசிரியர்​களின் பெயர்​களை ‘எமிஸ்’ தளத்​தில் பதிவு செய்​யு​மாறும் அறி​வுறுத்​தப்​பட்​டது.

ஜூன் 30-ம் தேதிக்குள்..

அனைத்து மாணவர்​களுக்​கும் உயர்​கல்வி பற்​றிய விழிப்​புணர்வு மற்​றும் தகவல்​கள் முழு​மை​யாக சென்​றடைந்​தால் மட்​டுமே அவர்​கள் உயர்​கல்வி தொடர்​வதை உறு​தி​செய்ய முடி​யும்.

இந்த இலக்கை அடைய ஏது​வாக, பள்​ளி​களில் ஏற்​கெனவே உள்ள வழி​காட்டி ஆசிரியர்​கள் ஒருங்​கிணைப்​பாளர்​களாக மாற்​றப்​பட்​டனர். அதனுடன், கூடு​தலாக 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையி​லான ஆசிரியர்​கள் உயர்​கல்வி வழி​காட்டி ஆசிரியர்​களாக​வும் நியமிக்​கப்​பட்​டனர்.

நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்​டில் உயர்​கல்வி வழி​காட்டி ஒருங்​கிணைப்​பாளர்​களில் யாரேனும் பணிபுரிந்த பள்​ளி​யில் இருந்து மாறு​தல் பெற விரும்​பி​னாலோ, ஓய்வு பெற்​றாலோ, பொறுப்​பில் இருந்து விலக விரும்​பி​னாலோ அவருக்கு பதிலாக, தகு​தி​யுள்ள மற்​றொரு ஆசிரியரை புதிய ஒருங்​கிணைப்​பாள​ராக நியமிக்க வேண்​டும்.

அதன்​படி, 250 மாணவர்​களுக்கு ஒரு​வர் என்ற விகிதத்​தில் உயர்​கல்வி வழி​காட்டி ஒருங்​கிணைப்​பாளர்​களை ஜூன் 30-ம் தேதிக்​குள் தேர்வு செய்​து, பள்ளி தலைமை ஆசிரியர்​கள் நியமிக்க வேண்​டும். இந்த விவரங்​களை ‘எமிஸ்’ தளத்​தில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.