惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

大猫的无限游戏
大猫的无限游戏
J
Java Code Geeks
小众软件
小众软件
D
Docker
腾讯CDC
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
V
V2EX
博客园 - 叶小钗
GbyAI
GbyAI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
B
Blog RSS Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 【当耐特】
IT之家
IT之家
博客园 - 司徒正美
M
MIT News - Artificial intelligence
T
The Blog of Author Tim Ferriss
The GitHub Blog
The GitHub Blog
罗磊的独立博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
L
LangChain Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
C
Check Point Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு: மே.வங்கம், அசாமி...
2026-04-30 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் அசாம், மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் (யுடிஎப்) வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.

கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் கடந்த 23-ம் தேதி முதல் கட்ட தேர்தலும், நேற்று 2-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாயின. ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் கேரளாவில் காங். தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 78 முதல் 90 இடங்களை கைப்பற்றும் எனவும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 49 முதல் 62 இடங்களை கைப்பற்றும் எனவும், பாஜக 3 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவித்துள்ளது.

பீப்பிள்ஸ் இன்சைட் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் யுடிஎப் 66 முதல் 76 இடங்களையும், எல்டிஎப் 58 முதல் 68 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் யுடிஎப் 75 முதல் 85 இடங்களையும், எல்டிஎப் 55 முதல் 65 இடங்களையும் கைப்பற்றும் எனவும் பாஜக 3 இடங்களை கைப்பற்றலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் அசாம் மாநிலத்தில் பாஜக 88 முதல் 100 இடங்களில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 24 - 36 இடங்களில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளது.

மேட்ரிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 85 முதல் 95 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான அணி 25 முதல் 32 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

பீப்பிள்ஸ் இன்சைட் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 88 முதல் 96 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான அணி 15 முதல் 26 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

மேட்ரிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் பாஜக 146 முதல் 161 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 125 முதல் 140 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பி-மார்க் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 150 முதல் 175 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 118 முதல் 138 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் திரிணமூல் காங்கிரஸ் 177 முதல் 187 இடங்களையும், பாஜக அணி 95 முதல் 110 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.