惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
大猫的无限游戏
大猫的无限游戏
月光博客
月光博客
Last Week in AI
Last Week in AI
腾讯CDC
The Cloudflare Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
MyScale Blog
MyScale Blog
博客园 - Franky
MongoDB | Blog
MongoDB | Blog
I
InfoQ
雷峰网
雷峰网
人人都是产品经理
人人都是产品经理
Blog — PlanetScale
Blog — PlanetScale
Y
Y Combinator Blog
H
Help Net Security
T
Tailwind CSS Blog
美团技术团队
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 三生石上(FineUI控件)
云风的 BLOG
云风的 BLOG
Google DeepMind News
Google DeepMind News
P
Proofpoint News Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமெரிக்கா தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு: ட்ரம்ப...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: அமெரிக்கா நடத்​திய தாக்​குதலில் இந்​திய மாலுமிகள் 3 பேர் உயி​ரிழந்​ததைக் கண்​டித்து டெல்​லி​யில் உள்ள ட்ரம்ப் போஸ்​டர்​களை ஆட்டோ ஓட்​டுநர்கள் கிழித்து ஏறிந்​தனர்.

அமெரிக்​கா​வின் 250-வது சுதந்​திர தினம் மே மாதம் கொண்டாடப்பட்​டது. இதையொட்​டி, இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூதர் செர்​ஜியோ கோர் ஒரு பிரச்​சா​ரத்​தைத் தொடங்​கி​னார். இதன்​படி, டெல்லி முழு​வதும் சுமார் 100 ஆட்டோ ரிக்​‌ஷாக்​களில் ‘ஹேப்பி பர்த்டே அமெரிக்​கா' என்ற வாசகங்​கள், ட்ரம்ப் படத்துடன் போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டிருந்​தன.

இந்​நிலை​யில், கடந்த வாரம் ஓமன் வளை​கு​டா​வில் உள்ள ‘எம்டி செட்​டபெல்​லோ' என்ற எண்​ணெய் டேங்​கர் கப்​பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்​திய தாக்​குதலில், 3 இந்​திய மாலுமிகள் கொல்​லப்​பட்​டனர். இதைக் கண்​டிக்​கும் வகை​யில் டெல்லி ஆட்டோ ரிக்​‌ஷாக்​களில் இடம்​பெற்​றிருந்த போஸ்​டர்​களை ஓட்டுநர்​கள் கிழித்து எறிந்​தனர்.

இது தொடர்​பான வீடியோ சமூக ஊடகங்​களில் வெளியாகி வைரலாகி வரு​கிறது. அதில், ஆட்டோ ஓட்​டுநர்​கள் ட்ரம்​புக்கு எதிராக முழக்​கமிடு​வதும், சக ஆட்டோ ஓட்​டுநர்​களை அந்த போஸ்​டர்​களை கிழிக்​கு​மாறு வற்​புறுத்​து​வதும் பதி​வாகி​ உள்​ளது. "அவர்​கள் அங்கே நம் இந்​தி​யர்​களைக் கொல்​கிறார்​கள்" என்று ஒரு ஓட்​டுநர் கூறு​வதுடன், மற்​றவர்​கள் தங்​கள் ஆட்​டோ​வில் எந்​தவொரு அமெரிக்க விளம்​பரத்​தையோ அல்​லது செய்​தி​யையோ வைக்க வேண்​டாம் என்று எச்​சரிக்​கிறார். இந்த வீடியோ ‘இந்துஸ்தான் ஜிந்​தா​பாத்' என்ற முழக்​கத்​துடன் முடிகிறது.

இந்த விவ​காரத்​தில், சிவிலியன் மாலுமிகளைக் கொல்​வதை ஒருபோதும் நியாயப்​படுத்த முடி​யாது என்று இந்​தி​யா, அமெரிக்க தூதர்​களை இரண்டு முறை நேரில் அழைத்து தனது கண்டனத்தைத் தெரி​வித்​துள்​ளது. இந்​திய வெளி​யுறவுத் ​துறை அமைச்​சர் எஸ். ஜெய்​சங்​கர், இந்த விவ​காரத்தை அமெரிக்க வெளி​யுறவுத் துறை செய​லா​ளர் மார்கோ ரூபியோ​விடம் கொண்டு சென்றுள்ளார்.

முன்​ன​தாக, மே மாதத்​தில் இப்​பிரச்​சா​ரம் தொடங்​கப்​பட்​ட​போது, ஒரு பாக்​கெட் தேயிலைக்​காக​வும், ஆட்​டோ​வின் கிழிந்த கூரையை மறைப்​ப​தற்​காக​வுமே தாங்​கள் இந்த போஸ்​டர்​களை ஒட்ட சம்​ம​தித்​த​தாக சில ஓட்​டுநர்​கள் தெரி​வித்​தனர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.