惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
D
Docker
腾讯CDC
J
Java Code Geeks
大猫的无限游戏
大猫的无限游戏
The Cloudflare Blog
Martin Fowler
Martin Fowler
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - Franky
博客园 - 三生石上(FineUI控件)
Recent Announcements
Recent Announcements
F
Fortinet All Blogs
IT之家
IT之家
WordPress大学
WordPress大学
M
MIT News - Artificial intelligence
爱范儿
爱范儿
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Vercel News
Vercel News
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
小众软件
小众软件
N
Netflix TechBlog - Medium
T
Tailwind CSS Blog
Engineering at Meta
Engineering at Meta
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தவெக அமைச்சரவையில...
2026-05-17 · via hindutamil

Updated on

2 min read

தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் விஜய் ரசிகர் களாக இருந்து எம்எல்ஏ-க்களாக வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா ? என்ற எதிர்பார்ப்பு, தென் மாவட்டத்தில் வெற்றி பெற்ற அவரது ரசிகராக இருந்து எம்எல்ஏ-க்கள் ஆனவர்களுக்கும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

தவெக வெற்றி பெற்ற நிலையில் விஜய் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட ரமணன், சிடிஆர்.நிர்மல்குமார், ராஜ் மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாகி உள்ளனர்.

விஜய் அமைச்சரவையில், தவெக-வை சேர்ந்த சிலருக்கும், காங்கிரஸ் மற்றும் அதிருப்தி அதிமுகவை சேர்ந்த சிலருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. விஜய்யுடன் பொறுப்பேற்ற அமைச்சர்கள் 9 பேரில், விஜய்யின் ஆரம்ப கால ரசிகராக இருந்து, அவர் தொடங்கிய மக்கள் இயக்கத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்தை மட்டும் குறிப்பிட முடியும்.

புதுச்சேரி விஜய் ரசிகர் மன்ற கவுரவச் செயலாளராக இருந்த ஆனந்த், புதுச்சேரி புஸ்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான பின்பு விஜய் ரசிகர் மன்றத்தின் பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு அறிமுகமாகி, பின்னர் விஜய்க்கும் நெருக்கமாகி அகில இந்திய விஜய் ரசிகர் மன்றப் பொறுப்பாளர், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் என பல பதவிகளை வகித்த அவர், தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தார்.

ஆதவ் அர்ஜுனா, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் (மகளின் கணவர்) ஆவார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தவெக-தொடங்கியபோது அக்கட்சியில் சேர்ந்தார். நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தைச் சேர்ந்த அருண்ராஜ் (46) முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி. தவெக தொடங்கியபோது கட்சியில் சேர்ந்தார்.

செங்கோட்டையன் மூத்த அரசியல்வாதியாக இருந்தாலும், அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்தவர்தான். சிடிஆர். நிர்மல்குமார், பாஜக, அதிமுகவில் இருந்துவிட்டு அதன்பிறகு தவெக கட்சியில் இணைந்தவர். ராஜ்மோகன், மேடை நிகழ்ச்சி தொகுப்பாளர், பட்டிமன்றப் பேச்சாளர். விஜய் தவெகவை தொடங்கியபோது, அக்கட்சியில் இணைந்தார்.

மருத்துவர் டி.கே.பிரபு, விஜய் அபிமானியாக இருந்தாலும், அவரது மக்கள் இயக்கத்தில் பணியாற்றவில்லை. தவெகவை தொடங்கியபோது அக்கட்சியில் இணைந்துள்ளார். கீர்த்தனா, விருதுநகரில் சுயேச்சையாகப் போட்டியிட திட்டமிட்டுதான் பணியாற்றி வந்தார். தவெக சிவகாசி வேட்பாளராக அறிவித்தபோதுதான், அவர் அக்கட்சியில் இணைந்த விவரமே கட்சி நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது. விஜய்யின் ரசிகராகவும், அவரது மக்கள் இயக்கத்தில் பணியாற்றி எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றவர்களுக்கும் அமைச்சரவையில் பிரதி நிதித்துவம் வழங்கப்பட வில்லை.

ஆனால், மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்எல்ஏ- வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதும், கட்சியில் சமீபத்தில் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், விஜய் ரசிகராக இருந்தவர்களுக்கு அந்த தொகுதிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அப்படி மதுரை மாவட்டத்தில் விஜய் ரசிகராக இல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிடிஆர்.நிர்மல் குமார் (திருப்பரங்குன்றம்), கார்த்திகேயன் (மதுரை கிழக்கு), கருப்பையா (சோழவந்தான்), முஸ்தபா (மதுரை மத்தி ) போன்றவர்கள் தற்போது தவெக-வில் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். ஆனால், அவரது ரசிகர்கள், ஆட்சி அதிகாரத்திலும், கட்சியிலும் முக்கியத்துவம் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.

மதுரை மாவட்டத்தில் மொத்த முள்ள 10 தொகுதிகளில் தவெக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல், சிவகங்கை மாவட்டத்திலும் மொத்தமுள்ள 4 தொகுதிகளையும் கைப் பற்றியது. திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளையும், தேனியில் 2 தொகுதிகளையும் தவெக கைப்பற்றியது.

இந்த மாவட்டங்களில் வெற்றிபெற்ற விஜய் ரசிகராக இருந்து தற்போது எம்எல்ஏ ஆனவர்கள் சிலருக்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் வாய்ப்பு வழங்கப்படுமா ? என்ற எதிர்பார்ப்பு, தென் மாவட்ட ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமைச்சராக பொறுப்பேற்று சொந்த மாவட்டங்களுக்கு வந்தவர்களுக்கும், விஜய் ரசிகராக இருந்து தவெக நிர்வாகிகளாக உள்ளவர்களுக்கும் இடையே தற்போது முட்டல் மோதல் நடந்து கொண்டிருக்கிறது.